கும்பகோணத்தில் பிரசித்தி பெற்றது என்றால் கோவில்கள், அடுத்து கும்பகோணம் டிகிரி காபி, அதற்கு அடுத்த படியாக பிரசித்தி பெற்றது கும்பகோணம் கடப்பா என்ற ஒரு உணவு ரெசிபி தான். வாருங்கள்! கும்பகோணம் கடப்பாவை சுவையாக செய்வது எப்படி என்று இந்த பதியவன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக நாம் இட்லி,தோசை மற்றும் சப்பாத்தி போன்றவற்றிற்கு சாம்பார், சட்னி, குருமா போன்றவற்றை செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக ஒரு ரெசிபி செய்து தரும் படி வீட்டில் உள்ளவர்கள் கூறுகின்றனரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விதமான சமையல் முறை இருக்கும்.அந்த வகையில் இன்று நாம் கும்பகோணம் ஸ்டைலில் கடப்பா ரெசிபியை சமைக்க உள்ளோம்.இந்த கடப்பா நாம் செய்கின்ற சட்னி, சாம்பாருக்கு ஒரு நல்ல மாற்று என்று கூறலாம்.
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்றது என்றால் கோவில்கள், அடுத்து கும்பகோணம் டிகிரி காபி, அதற்கு அடுத்த படியாக பிரசித்தி பெற்றது கும்பகோணம் கடப்பா என்ற ஒரு உணவு ரெசிபி தான். வாருங்கள்! கும்பகோணம் கடப்பாவை சுவையாக செய்வது எப்படி என்று இந்த பதியவன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு -1 கப்
பச்சை மிளகாய்-4
உருளை கிழங்கு-1
மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
இஞ்சி -1 இன்ச்
பூண்டு- 3 பற்கள்
சோம்பு-1/2 ஸ்பூன்
பொரிகடலை -1/4 ஸ்பூன்
கசகசா-1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
துருவிய தேங்காய் -1/4 கப்
தாளிப்பதற்கு:
எண்ணெய்-2 ஸ்பூன்
சோம்பு -1/2 ஸ்பூன்
பட்டை-2
லவங்கம் -2
பிரியாணி இலை-1
கறிவேப்பிலை-1 கொத்து
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
உப்பு -தேவையான அளவு
எலுமிச்சை சாறு -1/2 ஸ்பூன்
மல்லித்தழை-1 கையளவு
குளிர் காலத்திற்கு ஏற்ற சாக்லேட் மசாலா காபி செய்யலாம் வாங்க!
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் பாசி பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொண்டு, பின் அதில் தண்ணீர் ஊற்றி, 2 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் உருளைக்கிழங்கு பாதியாக வெட்டி போட்டு, இரண்டையும் சேர்த்து 4 விசில் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரின் விசில் அடங்கிய பிறகு , குக்கர் திறந்து உருளைக்கிழங்கை வெட்டிக் கொள்ள வேண்டும். பின் வெந்த பாசிப்பருப்பை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் சிறிது சோம்பு,கசகசா,பொரிகடலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் 1 கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்,பட்டை, லவங்கம், சோம்பு மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு வறுத்துக் கொண்டு, பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு, தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும்.
இப்போது கலவையில் மசித்து வைத்துள்ள பருப்பு,வேக வைத்துள்ள கிழங்கு, சிறிது உப்பு சேர்த்து கிட்டதட்ட 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பின்பு, இறுதியாக எலுமிச்சை சாறு,மற்றும் மல்லித்தழை சேர்த்து இறக்கினால் அருமையான கும்பகோணம் கடப்பா ரெடி!