அசத்தலான சுவையில் பப்பாளி அல்வா...செய்முறை இதோ..!!

By Kalai Selvi  |  First Published Aug 11, 2023, 2:50 PM IST

பப்பாளி அல்வா ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவே இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


எல்லாப் பழங்களிலும், ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கும் பழம் பப்பாளி. பப்பாளி வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். பப்பாளியை தினமும் சாப்பிட்டு வந்தால், சருமம் பளபளப்பாகவும், களங்கமற்றதாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை. இருப்பினும், நீங்கள் பப்பாளியை பழமாகத் தான் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் நீங்கள் எப்போதாவது பப்பாளியில் செய்யப்பட்ட இனிப்புகளை சாப்பிட்டிருக்கிறீர்களா? 

எனவே, பப்பாளி அல்வா எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம். செரிமானத்தை மேம்படுத்தும் பப்பாளியின் இந்த இனிப்பு உணவை நீங்கள் விரும்புவீர்கள். சுவையுடன், இந்த அல்வா ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் உள்ளது. எனவே சாப்பாடு சாப்பிட்ட பிறகு இந்த இனிப்பு சாப்பிடலாம். நீங்கள் ஆரோக்கியமாக இனிப்பு சாப்பிடவேண்டும் என்றால் வீட்டில் அல்வா  செய்யுங்கள். இதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சில நிமிடங்களில் செய்யக்கூடிய பப்பாளி அல்வா செய்வதற்கான எளிதான செய்முறையை அறிந்து கொள்வோம்.

Tap to resize

Latest Videos

பப்பாளி அல்வா செய்ய தேவையான பொருட்கள்-
பழுத்த பப்பாளி - 1
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
உலர் பழங்கள் - 1 கப்
நெய் - 2 தேக்கரண்டி

பப்பாளி அல்வா செய்யும் முறை:

  • முதலில் பழுத்த பப்பாளியை எடுத்து தோலை உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
  • இப்போது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைக்கவும். பின் கடாயில், நெய்யை ஊற்ற வேண்டும். பிறகு நெய்யை உருக்கிய பின் அதில் பப்பாளி துண்டுகளை போடவும்.
  • இரண்டு மூன்று நிமிடம் கிளறி விட்டு பப்பாளி துண்டுகளை நன்றாக மசிக்கவும்.
  • இதன் பிறகு வேகவைத்த பப்பாளியுடன் பால் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • இப்போது நீங்கள் இந்த கலவையை பால் வத்தும் வரை நன்கு கிண்ட வேண்டும். 
  • இதன் பிறகு பப்பாளியுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது அதை 2 முதல் 3 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர் அதில் சர்க்கரை சேர்க்கவும்.
  • சிறிது நேரம் கழித்து அதனுடன் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து வதக்கவும்.
  • சிறிது நேரம் கழித்து ஹல்வாவிலிருந்து நல்ல வாசனை வர ஆரம்பிக்கும். இப்போது அடுப்பை அணைக்க வேண்டும்.
  • உங்கள் சத்தான மற்றும் சுவையான பப்பாளி அல்வா தயார். பின் அதனை உலர் பழ துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.
click me!