வாருங்கள்! டேஸ்ட்டான பன்னீர் ப்ரைடு ரைஸ் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்சுக்கு ஒரே மாதிரியான சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என்று வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்து போர் அடிக்குதா? அப்போ இப்படி ஒரு ப்ரைடு ரைஸ் ரெசிபியை செய்து கொடுங்க. ப்ரைடு ரைஸ் என்றவுடன் வெஜ் ப்ரைடு ரைஸ், ஏக் ப்ரைடு ரைஸ், சிக்கன் ப்ரைடு ரைஸ் என்று தான் நாம் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் பன்னீர் வைத்து சூப்பரான சுவையில் ப்ரைடு ரைஸ் ரெசிபியை காண உள்ளோம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பள்ளி செல்லும் குட்டிஸ்களுக்கு இதனை லன்ச்க்கு கொடுத்து அனுப்பி பாருங்கள். சமத்தாக அனைத்தையும் சாப்பிட்டு இருப்பார்கள். மேலும் இதனை அடிக்கடி செய்து தரும்படி கேட்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவைபிரமாதமாக இருக்கும்.
வாருங்கள்! டேஸ்ட்டான பன்னீர் ப்ரைடு ரைஸ் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
பன்னீர் -100 கிராம்
அரிசி-1/4 கிலோ
பீன்ஸ்-7
கேரட்-1
கேப்ஸிகம்-1/2
மிளகு தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி- 1 ஸ்பூன்
பூண்டு -50
பச்சை மிளகாய்-4
உப்பு -தேவையான அளவு
என்னை-தேவையான அளவு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் நெல்லிக்காய் ஊறுகாய்!
செய்முறை:
முதலில் அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் சிறிது எண்ணெய் ஊற்றினால் அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
ஊறிய அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொதிக்கும் தண்ணீரில் போட்டு 1/2 வேக்காடாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி பாதி அளவு வெந்தபிறகு அதனை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி 1 க்ளாஸ் குளிர்ந்த நீர் ஊற்ற வேண்டும்.பன்னீரை ஒரே மாதிரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். கேரட், பீன்ஸ், கேப்ஸிகம் ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின் அதில் பன்னீரை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி விட்டு பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் கேப்ஸிகம்,பீன்ஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். பிறகு அதில் வறுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி விட்டு பின் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி விட்டு பரிமாறினால் சூப்பரான பன்னீர் சுவையான ப்ரைடு ரைஸ் ரெடி!