வாருங்கள்! ஆரோக்கியமான கம்பு ரொட்டி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
சிறுதானியமான கம்பில் அரிசியை விட பல மடங்கு இரும்புச்சத்து இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த உணவாகும். இதனை உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தலாம், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதனை தவிர கம்பு உணவுகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைக்க முடியும் .மேலும் கம்பினை அதிகமாக சேர்ப்பதனால் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க இயலும். பொதுவாக கம்பு வைத்து கம்பங்கூழ், கம்பு கஞ்சி, கம்பஞ் சோறு,கம்பு தோசை என்று பல விதமான உணவு வகைகளை செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் கம்பு வைத்து அருமையான கம்பு ரொட்டி ரெசிபியை பார்க்க உள்ளோம்.
வாருங்கள்! ஆரோக்கியமான கம்பு ரொட்டி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கம்பு - 2 கப்
தேங்காய்-1/4 கப்
வெல்லம் - 1/2 கப்
முந்திரி பருப்பு-1/4 கப்
வாழை இலை - 1
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
மீந்து போன இட்லியை வைத்து இனிமே இப்படி செய்து கொடுங்க -" இட்லி போண்டா"
செய்முறை:
முதலில் கம்பை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீர் சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைதடுக்க கொள்ள வேண்டும். முந்திரி பபருப்பினை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் கம்பில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு கம்பினை நிழலில் உலர்த்திக் கொண்டு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து மாவு போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவினை சல்லடையில் சேர்த்து சலித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அகலமான பாத்திரத்தில் கம்பு மாவை சேர்த்து அதில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, பொடித்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் சூடு செய்து வெல்லக் கரைசல் செய்து வடிகட்டி அதனை கம்பு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவு [போன்று பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மாவை ஒரே மாதிரியான உருண்டைகளாக உருட்டிக் கொண்டு அதனை வாழை இலையில் சிறிது நெய் தேய்த்து ஒவ்வொரு உருண்டையை வைத்து ரொட்டி போன்று தட்டிக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து சிறிது நெய் ஊற்றி ரொட்டியை போட்டு இரண்டு பக்கமும் சிவக்க செய்து சூடாக பரிமாறினால் கம்பு ரொட்டி ரெடி!