கம கமக்கும் பன்னீர் பொடிமாஸ் செய்தால் அடுத்த நிமிடமே அனைத்தும் காலி!

By Asianet Tamil  |  First Published Feb 17, 2023, 8:00 PM IST

வாருங்கள் ! யம்மி பன்னீர் பொடிமாஸ் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
 


பன்னீர் வைத்து செய்யப்படும் அனைத்து ரெசிபிக்களும் மிக சுவையாக இருக்கும். பன்னீரில்அதிக அளவு கால்சியம், புரதச்சத்துக்கள் உள்ளதால் எலும்பு, பற்களை பலப்படுத்துகிறது. பன்னீர் வைத்து பன்னீர் டிக்கா, பட்டர் பன்னீர் மசாலா, பன்னீர் 65, சில்லி பன்னீர், பன்னீர் கிரேவி, பன்னீர் சமோசா என்று பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வரிசையில் இன்று நாம் பன்னீர் வைத்து சூப்பரான ஒரு ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை செய்த அடுத்த நிமிடமே அனைத்தும் காலி ஆகி விடும் அளவிற்கு இதன் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.

பொதுவாக முட்டை, உருளைக்கிழங்கு போன்றவற்றை வைத்து பொடிமாஸ் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்று நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் வைத்து பன்னீர் பொடிமாஸ் ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை ஓவர் முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள்.

வாருங்கள் ! யும்மி பன்னீர் பொடிமாஸ் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
 

  • பன்னீர் - 200 கிராம்
  • வெங்காயம் - 1
  • பூண்டு - 2பற்கள்
  • இஞ்சி - 1 இன்ச்
  • பச்சை மிளகாய் - 3
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை- 1கொத்து
  • கொத்தமல்லி - கையளவு
  • கடுகு - ½ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - ½ ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவ
  • எண்ணெய்- தேவையான அளவு

குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடும் "சீஸ் மசாலா ஊத்தப்பம் " இப்படி செய்து அசத்துங்க!

Latest Videos

செய்முறை :

முதலில் பன்னீரை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியை தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை தோல் நீக்கி இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு,சீரகம், உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு அதில் இஞ்சி துருவல், இடித்து வைத்துள்ள பூண்டு மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு துருவி வைத்துள்ள பன்னீரை சேர்த்து அதில் மிளகுத் தூள் நன்றாக கிளறி விட்டு இறுதியாக மல்லித்தழையை தூவி இறக்கினால் பன்னீர் பொடிமாஸ் ரெடி!

click me!