வாருங்கள்! சத்தான பாலக் சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அசைவ பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு வகை என்றால் அதில் சிக்கன் முதல் இடத்தில் இருக்கும். சிக்கன் வைத்து சில்லி சிக்கன், சிக்கன் 65, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், சிக்கன் பிரியாணி என்று பல விதங்களில் சமைத்து சாப்பிட்டு இருப்போம். இந்த முறை நாம் சிக்கனோடு கீரை வைத்து சமைக்க உள்ளோம். கீரை போன்ற உணவுகளை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அப்படி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி கீரை சேர்த்து சிக்கனையும் சேர்த்து சமைத்து கொடுத்தால் அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். மீண்டும் இதனை அடிக்கடி செய்து தரும்படி கேட்கும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.
வாருங்கள்! சத்தான பாலக் சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
'
தேவையான பொருட்கள்:
சிக்கன்-1/2 கிலோ
பாலக் கீரை- 1 கட்
சின்ன வெங்காயம் -5
பூண்டு-2
பச்சை மிளகாய் -2
பட்டை - 1 இன்ச்
கிராம்பு -3
பிரியாணி இலை -1
தயிர் -1/4 கப்
மல்லித்தழை-கையளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நாளை லஞ்சுக்கு நாவூறும் பன்னீர் ப்ரைடு ரைஸ் செய்து பாருங்க!
செய்முறை :
முதலில் பாலக்கீரையை அலசி விட்டு அதனை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.சிக்கனை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அரிந்து வைத்துள்ள பாலக் கீரை சேர்த்து வேக விட வேண்டும். மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
undefined
தாளித்த பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். இவை அனைத்தும் வதங்கிய பிறகு அதில் வேக வைத்து எடுத்துள்ள கீரையை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அதனை நன்றாக ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடான பின் அதில் அரைத்து வைத்துள்ள கீரை பேஸ்ட் சேர்த்து வதக்கி விட்டு பின் அதில் கெட்டி தயிர் சேர்த்து கிளறி விட வேண்டும். கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் போது அலசி வைத்துள்ள சிக்கன் துண்டுகளுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான பாலக் சிக்கன் ரெடி!