குட்டிஸ்களின் ஆல் டைம் பேவரைட் நூடுல்ஸ் ரோல்!

By Dinesh TG  |  First Published Jan 23, 2023, 5:17 PM IST

வாருங்கள்! டேஸ்ட்டான நூடுல்ஸ் ரோல் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்ற உணவு வகைகளில் நூடுல்ஸும் ஒன்று.வழக்கமாக நூடுல்ஸை பல விதங்களில் செய்து
சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் நூடுல்ஸ் வைத்து அருமையான நூடுல்ஸ் ரோல் செய்ய உள்ளோம். பொதுவாக நாம் பன்னீர் ரோல், சிக்கன் ரோல், வெஜ் ரோல் என்று தான் சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் கொஞ்சம் வெரைட்டியாக நூடுல்ஸ் ரோல் செய்வதை காண இருக்கிறோம். இந்த நூடுல்ஸ் ரோலினை சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் அளவில் இதன் சுவை இருக்கும்.

வாருங்கள்! டேஸ்ட்டான நூடுல்ஸ் ரோல் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • நூடுல்ஸ்-1 பேக்
  • பிரட்-4 ஸ்லைஸ்கள்
  • வெங்காயம்-1
  • தக்காளி-1
  • மிளகாய்த்தூள்-1/4 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி-1/4ஸ்பூன்
  • எண்ணெய்-தேவையான அளவு  

          குளுகுளுவென்று குலுக்கி சர்பத் செய்து பருகலாம் வாங்க!

Latest Videos

undefined


செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடான பிறகு, அதில் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு, அதில் தக்காளி சேர்த்து,தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

பின் அதில் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், நூடுல்ஸ் மசாலாத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின் அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின் நூடுல்ஸை ஒன்றிரண்டாக உடைத்து போட்டு விட வேண்டும். நூடுல்ஸை நன்றாக வெந்து தண்ணீர் அனைத்தும் வற்றிய பிறகு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

இப்போது பிரட் ஸ்லைஸ்களின் 4 புறமும் இருக்கின்ற ஓரங்களை வெட்டி விட்டு, பிரெட்டினை நீரில் டிப் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பிரட்டில் இருக்கும் தண்ணீரை பிழிந்து எடுத்துக் கொண்டு அதில் 2 ஸ்பூன் நூடுல்ஸ் வைத்து ரோல்கள் போன்று சுற்றி கொள்ள வேண்டும். இதே மாதிரி அனைத்து பிரெட் துண்டுகளின் நடுவே நூடுல்ஸ் வைத்து ரோல் செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு நாண் ஸ்டிக் தவா வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் இந்த ரோல்களை வைத்து பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான் !சூப்பரான சுவையில் நூடுல்ஸ் ரோல் ரெடி! இதற்கு டொமேட்டோ சாஸ் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். 

click me!