மைசூர் புகழ் "மைசூர் போண்டா" செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க !

By Dinesh TG  |  First Published Dec 28, 2022, 8:18 PM IST

வாருங்கள்! ருசியான மைசூர் போண்டாவை மிக எளிமையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


மைசூர் என்றவுடன் நாம் அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது மைசூர் அரண்மனை, மைசூர் சந்தனம் போன்றவை தான் . அதே போன்று மைசூரில் பிரசித்தி பெற்ற உணவுகள் என்றால் மைசூர் பாக்,மைசூர் மதூர் வடை. அந்த வரிசையில் அடுத்த படியாக மைசூர் போண்டாவும் பிரசித்தி பெற்ற ஒரு உணவு எனலாம். 

இந்த மைசூர் போண்டாவானது நாம் மாலை நேரங்களில் எடுத்துக் கொள்ளும் ஸ்னாக்ஸ் வகையை சேர்ந்தது. இதன் சுவையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். வாருங்கள்! ருசியான மைசூர் போண்டாவை மிக எளிமையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Latest Videos

undefined

மைசூர் போண்டா செய்ய தேவையான பொருட்கள்: 

உளுத்தம் பருப்பு - 1 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 3 
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லித்தழை-கையளவு 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
மிளகு - 1 ஸ்பூன்
தேங்காய் - 1/4 முடி 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

விடுமுறை கொண்டாட்டம்! குழந்தைகளுக்கு பால் - இப்படி செய்து கொடுங்க. மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!

செய்முறை: 

முதலில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை,மல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். மிளகினை கொஞ்சம் இடித்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணிநேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

2 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்ஸி ஜாரில் பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி சாஃப்ட்டாக, நைசாக மற்றும் கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மாவினை ஒரு பௌலில் எடுத்து கொண்டு அதில் அரிசி மாவு, பொடியாக அரிந்து வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் பொடித்த மிளகு,பெருங்காயத் தூள் மற்றும் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடான பிறகு, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து, பிசைந்த மாவினை கையில் எடுத்துக் கொண்டு ஒரே அளவில் சிறு சிறு உருண்டைகளாக போட்டு ஒரு பக்கம் பொன்னிறமாக வந்த பிறகு, மறு பக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுக்க வேண்டும். 

இதே போன்று அனைத்து மாவினையும் உருண்டைகளாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மைசூர் போண்டா ரெடி!! இதனை தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

click me!