உடலில் இருக்கும் கொழுப்பினை கரைக்க உதவும் "முட்டை கோஸ் சூப்"!

By Dinesh TG  |  First Published Dec 28, 2022, 6:14 PM IST

வாருங்கள்! சுலபமான முட்டை கோஸ் சூப்பினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய தலைமுறையினர் பலரும் அதிக உடல் பருமன் பிரச்சனையால் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என்று பின்பற்றியும் போதிய பலன் கிடைக்காமல் வருத்தப்படுகிறார்கள். உடல் எடையை குறைக்க விரும்புவோர் உணவில் சில கட்டுப்பாடுகள் மற்றும் சில மாற்றங்களை செய்து முறையாக பின்பற்றினாலே போதும். 

இயற்கையாகவே நமக்கு பல விதமான காய்கறிகள் உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை கணிசமாக குறைக்க வழி வகுக்கிறது. அந்த வகையில் முட்டைகோஸானது உடல் எடையை குறைக்க பெரிதும் உதுவுகிறது. பொதுவாக நாம் வெஜ் சூப், மட்டன் சூப், சிக்கன் சூப், மஷ்ரூம் சூப் என்று பல விதமான சூப்களை செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் முட்டைகோஸ் வைத்து சுலபமான சூப் ரெசிபியை இன்று நாம் காண உள்ளோம். 

Tap to resize

Latest Videos

இந்த முட்டைகோஸ் சூப்பினை அடிக்கடி செய்து எடுத்துக் கொண்டால் உடல் எடையில் நல்ல மாற்றத்தை எளிதில் காணலாம். முட்டைகோஸானது உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க வழிவகுக்கிறது. வாருங்கள்! சுலபமான முட்டை கோஸ் சூப்பினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் - 1 கப்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை-கையளவு 
பிரெஷ் க்ரீம் - 1 ஸ்பூன்

உடல் எடையை குறைக்க எளிய வழிசெய்யும் "கம்பு சாம்பார் சாதம்"!

செய்முறை:

முதலில் முட்டைகோஸை நன்றாக அலசி விட்டு சுத்தம் செய்து மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டினை இடித்து பேஸ்ட் போன்று செய்து கொள்ள வேண்டும்.  அதே போன்று மல்லித்தழையை பொடியாக்கி அரிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வதக்கி விட வேண்டும். பின் கடாயில் அரிந்து வைத்துள்ள முட்டைகோஸ் சேர்க்க வேண்டும். பின் அதில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

கோஸ் கொதித்து நன்றாக வாசனை வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். பின் அதன் மேல் பிரெஷ் க்ரீம் மற்றும் பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் சுவையான முட்டைகோஸ் சூப் ரெடி!

click me!