வாருங்கள் !ருசியான ஆட்டுக்கால் பாயாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சண்டே என்றால் அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன் ,மீன் என்று சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் மட்டன் வைத்து எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் செய்த அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலி ஆகி விடும்.
அந்த அளவிற்கு மட்டன் அதற்கென ஒரு தனி சுவையை தரும். அந்த வகையில் இன்று நாம் ஆட்டுக்கால் வைத்து ருசியான ஆட்டுக்கால் பாயாவை செய்ய உள்ளோம். இதனை வழக்கமாக இட்லி மற்றும் இடியாப்பத்திற்கு மிகவும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். வாருங்கள் !ருசியான ஆட்டுக்கால் பாயாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் - 1/2
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 3
துருவிய தேங்காய் - 1/2 கப்
சோம்பு - 2 ஸ்பூன்
கசகசா - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மல்லித்தழை - கையளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வட இந்திய ஸ்டைலில் ஆரோக்கியமான "வெஜ் சப்ஜி" ! இப்படி செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க!
செய்முறை:
முதலில் ஆட்டுக்காலில் இருக்கும் கறுத்த தோலினை மட்டும் எடுத்து விட்டு,ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஆட்டுக்காலை போட்டு சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.பின் அதனைஅலசி எடுத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் ஆட்டுக்கால் போட்டு 3 சின்ன வெங்காயம், 1/2 தக்காளி பழம், சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும்.
பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொண்டு, தண்ணீர் ஊற்றிக் கொண்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து குக்கரை மூடிவிட்டு 12 விசில் வரை வேக வைத்து அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், கசகசா,சோம்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில்ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு சோம்பு சேர்த்து தாளித்து விட்டு பின் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் வதக்கி விட வேண்டும். அடுத்ததாக தக்காளியை சேர்த்து,தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி விட்டு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கொஞ்சம் கிளறி விட வேண்டும்.
பின் அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து சிம்மில் வைத்து கொதிக்க விட வேண்டும். இப்போது கடாயில் ஆட்டுக்காலை சேர்த்து வேக வைத்த தண்ணீரையும் சேர்த்துகொஞ்சம் கிளறி விட்டு,சிறிது உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் சுமார் 10 நிமிடங்கள் மணமணக்கும் ஆட்டுக்கால் பாயா ரெடி!