வாருங்கள்! ஆரோக்கியத்திற்கு ஏற்ற முடக்கத்தான் கீரை சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக நாம் தினமும் சாப்பிடுகின்ற இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி , கார சட்னி என்று செய்து சாப்பிட்டு இருப்போம். அதை தவிர வேறு சட்னி என்றால் நாம் கொஞ்சம் யோசிக்க தான் செய்ய வேண்டும்.
இன்று நாம் புதுமையாக வித்தியாசமாக அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒரு சட்னியை தான் காண உள்ளோம். இன்று நாம் முடக்கத்தான் கீரை வைத்து சட்னியை செய்ய உள்ளோம். முடக்கத்தான் கீரை வைத்து கூட்டு, பொரியல், தோசை என்று செய்து சாப்பிட்டு இருப்போம். இந்த முடக்கத்தான் கீரையை உணவாக எடுத்துக் கொள்வதால் வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலி, வாத பிரச்சனைகள் போன்றவைகளை வராமல் தடுக்கும்.
தேவையான பொருட்கள் :
undefined
தாளிப்பதற்கு:
என்ன! சிக்கன் வைத்து ஊறுகாயா? பார்க்கலாம் வாங்க !
செய்முறை:
முதலில் முடக்கத்தான் கீரை மற்றும் மல்லித்தழையை அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் இஞ்சி, பூண்டு , கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
பின் இதில் தோல் உரித்த சின்ன வெங்காயம், சிறிது புளி , பூண்டு மற்றும் பச்சை மிளகாய் முதலியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்த பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அலசி வைத்துள்ள முடக்கத்தான் கீரை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கிக் கொண்டு அதனை நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
கலவை நன்கு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, அதில் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றினால் சத்தான முடக்கத்தான் கீரை சட்னி ரெடி!