வாருங்கள்! ருசியான சிக்கன் ஊறுகாயை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக சிக்கன் வைத்து பிரியாணி,கிரேவி, 65 என்று பல விதங்களில் சமைத்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் சிக்கன் வைத்து ருசியான சிக்கன் ஊறுகாய் செய்ய உள்ளோம். என்ன! சிக்கனில் ஊறுகாயா? என்று யோசிக்கிறீர்களா? ஆமாங்க! மாங்காய் ,நெல்லிக்காய் , பூண்டு ஊறுகாய்களை போன்று சிக்கன் வைத்தும் சூப்பரான ஊறுகாய் செய்யலாம். இந்த சிக்கன் ஊறுகாயை சத்தம், சப்பாத்தி போன்றவற்றிக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வழக்கமாக செய்யும் ஊறுகாய்களில் இருந்து இது முற்றிலும் வேறு விதமான சுவையை தரும்.
வாருங்கள்! ருசியான சிக்கன் ஊறுகாயை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு:
மசாலா அரைப்பதற்கு:
இஞ்சி பூண்டு அரைக்க:
ஊறுகாய் செய்வதற்கு:
க்ரிஸ்பி அண்ட் க்ரன்ச்சி ஃபிஷ் பால்ஸ் செய்யலாம் வாங்க!
செய்முறை:
முதலில் சிக்கனை அலசி விட்டு பின் அதனை ஒரே மாதிரியான அளவில் சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைத்து விட வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் தீயினை மிதமாக வைத்து ஊறிய சிக்கனை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தோல் உரித்த இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் தனியா, வெந்தயம், கடுகு, சீரகம் ,பட்டை மற்றும் லவங்கம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும். வறுத்த மசாலா கலவை ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சிக்கன் பொரித்து எடுத்துள்ள கடாயில் உள்ள எண்ணெயில் கொரகொரவென அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதில் அரைத்த மசாலா பவுடர் சேர்த்து நன்றாக கிளறி விட்டு அதில் பொறித்த சிக்கன்,சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.
சிக்கனில் அனைத்து மசாலாக்களும் ஒன்றோடு ஒன்று இணைந்த பிறகு அடுப்பை ஆஃப் செய்து விட்டு லெமன் ஜூஸ் சேர்த்து கிளறி விட்டு ஆற வைக்க வேண்டும். அவ்ளோதான்! சூப்பரான சுவையில் சிக்கன் ஊறுகாய் ரெடி! ஆறிய பிறகு இந்த கலவையை பீங்கான் குடுவையில் அல்லது ஊறுகாய் ஜாடியில் எடுத்து வைத்தால் நீண்ட நாட்கள் ( 2 மாதங்கள்) வரை உபயோகிக்கலாம்.