வாருங்கள்! சுவையான மெது வடை ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மாலை நேரங்களில் வீட்டிற்கு தீடீர்ரென்று கெஸ்ட் வந்தால் முதலில் ஒரு டீயோ அல்லது காபியோ செய்து கொடுப்போம். பின் அவர்களுக்கு சாப்பிட ஏதோ ஒரு ஸ்னாக்ஸ் செய்து தருவது நமது பழக்கம். அந்த ஸ்னாக்ஸ் அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்க வேண்டும் என்று யோசிப்போம். அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் என்று கூறும் போது வடை பிரதானமாக இருக்கும். வடையில் பருப்பு வடை, மெது வடை, கீரை வடை, மசாலா வடை என்று பல விதமான வடைகளை செய்யலாம். அனைத்து வடைகளும் அனைவரும் விரும்பி சாப்பிடும் விதம் ருசியாக இருக்கும்.
அந்த வகையில் இன்று நாம் மெது வடை ரெசிபியை பார்க்க உள்ளோம். மெது வடை என்றால் நாம் உளுந்தை ஊற வைத்து அரைத்து செய்வோம். ஆனால் இன்று நாம் நம் வீட்டில் இருக்கும் இட்லி மாவினை வைத்து மொறுமொறுப்பான மெது வடையை காண உள்ளோம். இந்த வடைக்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
வாருங்கள்! சுவையான மெது வடை ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு- 2 கப்
ரவை – 1 1/2 ஸ்பூன்
கடலை மாவு – 3 ஸ்பூன்
அரிசி மாவு – 1 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
மஞ்சள்-1 சிட்டிகை
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
மிளகு- 2 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
இந்த வார விடுமுறைக்கு சூப்பரான ஸ்ரீலங்கன் ஸ்பெஷல் தக்கடி செய்து பாருங்க!
செய்முறை:
முதலில் வெங்காயம், மல்லித்தழை ,பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகினை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் புளித்த இட்லி மாவினை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ரவை, மற்றும் கடலை மாவு ஆகியவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதில் அரிசி மாவு, பேக்கிங் சோடா ,உப்பு மற்றும் மஞ்சள் ஆகியவை சேர்த்து கட்டி தட்டாமல் நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் ,பச்சை மிளகாய், மிளகு, மல்லித்தழை மற்றும் பொடித்து வைத்துள்ள மிளகினை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடான பின் அதில் மாவினை கையில் எடுத்து எண்ணெய்யில் போட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைக்க வேண்டும். வடை ஒரு பக்கம் பொன்னிறமாக ஆன பின் மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக எடுத்தால் சூப்பரான மெது வடை ரெடி!