வாருங்கள்! அனைவருக்கும் ஏற்ற தினை கருப்பட்டி அல்வா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து மகிழ்ச்சியான தருணங்களிலும் முதலில் நாம் சாப்பிடக் கூடியது ஸ்வீட் தான். திருமண நாள், பிறந்தநாள், திருவிழா மற்றும் வீட்டில் நடைபெறும் சுப நிகழிச்சிகள் அனைத்திற்கும் என்ன ஸ்வீட் செய்யலாம் என்று யோசிப்போம். பொதுவாக கடைகளில் இருந்து ஏதேனும் ஒரு ஸ்வீட் வாங்கி சுவைப்போம் அல்லது கேசரி, ஜாமூன் என்று வழக்கமாக செய்வதையே செய்து சாப்பிடுவோம் ஆனால் அதனை தாண்டி வேறு ஏதேனும் புதுமையாக கொஞ்சம் டிஃபரென்ட்டாக செய்ய வேண்டும் என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.
பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற ஸ்வீட்டாக இருக்காது. ஆனால் இன்று நாம் பார்க்க போகும் ஸ்வீட் சிறுதானியம் வைத்து செய்யப்படுவதால் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற ஒரு ஸ்வீட் ஆக இருக்கும் . சிறுதானியங்கள் வைத்து செய்யப்படும் ஒவ்வொரு ரெசிபியும் ஒவ்வொரு விதமான சத்தினை தரும். அந்த வகையில் இன்று நாம் சிறு தானியம் வைத்து சத்தான மற்றும் சுவையான அல்வா ரெசிபியை பார்க்க உள்ளோம்.
வாருங்கள்! அனைவருக்கும் ஏற்ற தினை கருப்பட்டி அல்வா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
தினை அரிசி - 200 கிராம்
கருப்பட்டி - 175 கிராம்
முந்திரி - 30 கிராம்
திராட்சை - 30 கிராம்
பாதாம் - 20 கிராம்
பிஸ்தா - 20 கிராம்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
சுக்கு பொடி - 1 ஸ்பூன்
நெய் - 100 கிராம்
மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் பாலக் சிக்கன்!
செய்முறை :
முதலில் தினை அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். முந்திரி,பாதாம் ,பிஸ்தா ஆகியவற்றை ஒன்றுக்கு இரண்டாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கருப்பட்டியை நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பௌலில் பொடித்த கருப்பட்டி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைசல் செய்து கொண்டு அடுப்பினை ஆஃப் செய்ய வேண்டும். பின் அதனை சல்லடையில் போட்டு வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்த்துக் கொள்ள வேண்டும்.
ஊற வைத்துள்ள தினை அரிசியை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு அதனை அப்படியே வைத்து விட வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு அரைத்து வைத்துள்ள திணையில் இருக்கும் நீரை மட்டும் தனியாக எடுத்து விட வேண்டும். அடுப்பில் 1 கடாய் வைத்து அதில் சுமார் 200 மில்லி தண்ணீர் ஊற்றி பின் கருப்பட்டி பாகு மற்றும் அரைத்த தினை ஆகியவை சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட வேண்டும். இப்போது கடாயில் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் அதில் ஏலக்காய் தூள், சுக்கு பொடி ஆகியவை சேர்த்து கிளறி விட வேண்டும்.
நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறி விட வேண்டும்.இப்போது ஒரு டிரேயில் சிறிது நெய் ஸ்ப்ரெட் செய்து அதில் பொடித்து வைத்துள்ள முந்திரி, பாதாம், பிஸ்தாஆகியவற்றை தூவி விட்டு அதன் மேல் அல்வாவை சேர்த்து நன்றாக பரப்பி விட வேண்டும். அல்வா கொஞ்சம் ஆறிய பின் உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டி பரிமாறினால் ஆரோக்கியமான தினை கருப்பட்டி அல்வா ரெடி!