சாதம் மீதமாயிடுச்சா? அப்போ இப்படி செய்ங்க.

By Dinesh TG  |  First Published Sep 30, 2022, 2:49 PM IST

நம்மில் அதிகமானோர் சாதம் மிஞ்சி விட்டது, மீதமான சாதத்தை என்ன செய்ய ?என்று தெரியாமல் வீணாக தூக்கி குப்பையில் போடுகிறார்கள்.மீதமான சாதம் வைத்து இட்லி, போண்டா என பல வகையான ரெசிபிஸ் செய்யலாம். அதில் ஒன்றை தான் இன்று நாம் பார்க்க போகிறோம். 


இந்த ரெசிபிக்கு என்று தனியாக வேறு எதுவும் தேவை இல்லை . வீட்டில் உள்ள முட்டை,காய்கறிகள் மற்றும் மிளகு தூளை மீதமான சாதத்துடன் சேர்த்தால் ருசியான, கலரான, ஆரோக்கியமான முட்டை பிரைட் ரைஸ் தயாராகி விடும் . 

முட்டையானது நரம்பு மண்டலத்தை பாதுகாக்க ,நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, மூளை மற்றும் நரம்பு மண்டலம் திறம்பட செயல்பட , கண்புரை நோய், கண் நோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்க பயன்படுகிறது.

Tap to resize

Latest Videos

சரிங்க.எக் பிரைட் ரைஸ்க்கு என்னென்ன பொருட்கள் தேவை?மற்றும் எப்படி செய்வது?பார்க்கலாம் வாங்க. 

வீட்டிளுள்ள 3 பொருளில் 10 நிமிடத்தில் “திடீர் அல்வா” ரெடி!

எக் பிரைட் ரைஸ்க்கு தேவையான பொருட்கள்:

சாதம் 2 கப் 

முட்டை 2

வெங்காயம் 1/2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் 1(பொடியாக நறுக்கியது

கேரட் 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் 2ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

தக்காளி 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

டொமேட்டோ கெட்சப் 1 ஸ்பூன் 

மிளகு தூள் 1 ஸ்பூன் 

உப்பு தேவையான அளவு 

செய்முறை:

நமக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத நல்ல பாத்திரங்கள் எவையென தெரிந்து கொள்ளுங்கள்?

சாதத்துடன் 2 முட்டையை உடைத்துவிட்டு நன்றாக கிளறி வைத்துக்கொள்ள வேண்டும்.அடுப்பில் 1 Pan வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின் கேரட், பீன்ஸ் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட வேண்டும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கிய பின், டொமேட்டோ கெட்சப் சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் முட்டை கிளறிய சாதத்தை போட்டு மிளகு தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வரை நன்கு கிளற வேண்டும். அவ்ளோதாங்க !அசத்தலான, கலர்புல்லான, ருசியான முட்டை பிரைட் ரைஸ் ரெடி! இனிமேல் சாதம் மீந்து போனால் கவலையை விடுங்க.இந்த மாதிரி செய்து பாருங்க. சூப்பரான எக் பிரைட் ரைஸ் வீட்டிலேயே செய்து விடலாம் ரொம்ப ஈஸியாக!

click me!