பல்வேறு ஆரோக்கிய நலன்களை வாரி வழங்கும் வெண்டைக்காய் வைத்து சப்ஜி ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை தோசை, சப்பாத்தி, நாண், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு வைத்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் அதிக அளவில் காய்கறிகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம். ஒவ்வொரு காய்கறிகளிழும் பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காய்கறிகளை எடுத்துக் கொண்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில் இன்று நாம் “வெண்டைக்காய்” வைத்து சூப்பரான ஒரு ரெசிபியை பார்க்க உள்ளோம்.
வெண்டைக்காயைப் பச்சையாக சாப்பிட்டாலே நமது பற்கள் தூய்மை அடைவதுடன் ஈறுகளில் ரத்த ஓட்டம் தூண்டப்படும்.மேலும் ஈறு தொடர்பான நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெண்டைக்காயை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கலாம்.மேலும் மலசிக்கல் பிரச்சனையையும் தீர்க்கும், தவிர ஞாபகசக்தி, கண்பார்வை போன்றவை மேம்படும். ஆகையால் வாரத்திற்கு 2 முதல் 3 முறையாவது வெண்டைக்காயை உணவில் எடுத்துக் கொண்டால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பல்வேறு ஆரோக்கிய நலன்களை வாரி வழங்கும் வெண்டைக்காய் வைத்து சப்ஜி ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை தோசை, சப்பாத்தி, நாண், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு வைத்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 2
பூண்டு - 4 பற்கள்
சீரகம் - 2 ஸ்பூன்
வர மிளகாய் - 4
மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
மல்லித்தழை - கையளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
கோடைவெயிலுக்கு ஏற்ற குளு குளு ஃப்ரூட்ஸ் தயிர் பச்சடி!
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை அலசி தண்ணீர் இல்லாமல் உலர்த்தி ஒரே மாதிரியான அளவில் நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு மிக்சி ஜாரில் சீரகம், வர மிளகாய், அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, தோல் உரித்த பூண்டு மற்றும் ஆகியவை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் அதில் அரிந்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கி அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி சுண்டி வரும் வரை வதக்கி விட வேண்டும்
இப்போது வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய் சேர்த்து அதில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொஞ்சம் கெட்டியாக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கிரேவி பதத்திற்கு வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி மல்லித்தழையை தூவி பரிமாறினால் டேஸ்ட்டான வெண்டைக்காய் சப்ஜி ரெடி!