இட்லி,தோசைக்கு மாவு இல்லனு கவலையா ! 1 தடவ இன்ஸ்டன்ட் அடை செய்து சாப்பிடுங்க! பின் இதனையும் அடிக்கடி செய்வீங்க!

By Asianet TamilFirst Published Mar 31, 2023, 7:49 AM IST
Highlights

வாருங்கள்! இன்ஸ்டன்ட் அடை ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

நமது அன்றாட உணவில் இட்லியும் ,தோசையும் ஒரு மிகப் பெரிய இடத்தை பெற்றுள்ளது. பெரும்பாலோனோர் வீட்டில் காலை மற்றும் இரவு உணவுக்கு இட்லி மற்றும் தோசையை தான் சாப்பிடுகிறார்கள். குழந்தைகள்,வயதானவர்கள்,உடம்பு சரியில்லாதவர்களுக்கு ஏற்ற உணவு. தவிர அலுவலகம் சென்று வந்தவர்கள் விரைவாக செய்யக்கூடிய ரெசிபி தான் இந்த இட்லி மற்றும் தோசை. ஆனால் இப்படியான இட்லி,தோசை சுடுவதற்கு மாவு இல்லையென்றால் சற்று சிரமம் மற்றும் கவலை தான்.

ஆனால் இனிமேல் மாவு இல்லையென்று கவலை படாதீங்க. ஒரு முறை இன்ஸ்டன்ட்டாக இப்படி அடை செய்து பாருங்க. சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் அள்ளித்தரும். இதனை 1 முறை செய்து சாப்பிட்டால், பின் வாரத்தில் ஒரு முறையாவது இதனை செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கூறும் அளவிற்கு இதன் சுவை சூப்பராக இருக்கும்.

வாருங்கள்! இன்ஸ்டன்ட் அடை ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

ரவை - 3/4 கப்
பிரட் ஸ்லைஸ்- 4
வெங்காயம்- 1
பச்சை மிளகாய்-1
கறிவேப்பிலை-1 கொத்து
மல்லித்தழை - கையளவு
கேரட்-1
கேப்ஸிகம் -1/2
அரிசி மாவு - 2 ஸ்பூன்
கரம் மசாலா- 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் -1 /2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் ரவையை தண்ணீர் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த ரவையை தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொண்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துஅதனுடன் பிரட் ஸ்லைஸும் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக வெங்காயம், கேப்ஸிகம், பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழையை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ரவை வைத்துள்ள பௌலில் அரிசி மாவு, சில்லி பிளேக்ஸ்,கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து விட வேண்டும்.

இப்போது பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் , கேரட் என அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கலந்து அடை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவினை சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து,தோசைக்கல் சூடான பின், இந்த மாவினை அடை போன்று ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு, வேக விட்டு , ஒரு பக்கம் வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் வைத்து வேக வைத்து எடுத்தால் அருமையான டேஸ்டில் இன்ஸ்டன்ட் அடை ரெடி! இதற்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாகவ இருக்கும்.

ரெஸ்டாரண்டில் கூட இப்படி மட்டன் டிக்கா மசாலாவை சாப்பிட்டுருக்க மாட்டீங்க நீங்களும் 1 முறை ட்ரை செய்து பாருங்க

click me!