வெரைட்டி ரைஸில் ஒன்றான பாசி பயறு சாதத்தினை செய்து லஞ்சிற்கு கொடுக்கலாம். பாசிப்பயறில் அதிக அளவு ப்ரோட்டீன் இருப்பதால் இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு ஆரோக்கிய உணவாகும்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்சிற்கு எப்பொழுதும் ஒரே விதமான உணவுகளை தான் பெரும்பாலும் கொடுத்து அனுப்புகிறோம். ஏதாவது சாதம் வைத்து ஒரு சாம்பார் அல்லது குழம்பு, கூட்டு அல்லது பொரியல் என்று சமைத்து தருவோம். ஒரு சிலர் வெஜ் ரைஸ், லெமன் ரைஸ், தயிர் சாதம், புளிசாதம், தக்காளி சாதம் என்று ஏதோ ஒரு வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்து அனுப்புவார்கள். இப்படி இதனையே மீண்டும் மீண்டும் செய்து தருவதால் குழந்தைகள் சிலர் மதிய உணவை பாதி சாப்பிட்டு மீதி பாதியை அப்படியே வீட்டிற்கு கொண்டு வருவார்கள். மேலும் அவர்கள் அவையெல்லாம் சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பார்கள். வெரைட்டி ரைஸில் ஒன்றான பாசி பயறு சாதத்தினை செய்து லஞ்சிற்கு கொடுக்கலாம். பாசிப்பயறில் அதிக அளவு ப்ரோட்டீன் இருப்பதால் இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு ஆரோக்கிய உணவாகும்.
தேவையான பொருட்கள் :
அரைக்க:
துருவிய தேங்காய் - 1/4 கப்
இஞ்சி - 2 துண்டு
பச்சை மிளகாய்-6
பூண்டு - 2 பற்கள்
சோம்பு- 1 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
சாதத்திற்கு :
undefined
பாசிப்பயறு- 1/2 கப்
அரிசி-1 1/2 கப்
பெரிய வெங்காயம்-2
தக்காளி -2
பச்சை மிளகாய் -1
நெய் - 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
பட்டை - 2 இன்ச்
பிரியாணி இலை -1
கிராம்பு-3
ஏலக்காய் -2
முந்திரி-2
கேரட்-1
உருளை கிழங்கு-1
கேப்ஸிகம்-1
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
வீட்ல தேங்காய் இருந்தா போதும் தித்திப்பான "ஸ்வீட் ஃபப்ஸ்" செய்திடலாம்.
செய்முறை :
முதலில் பாசிப்பயறு ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுமார் 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை மெல்லிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொளல் வேண்டும். கேரட் ,உருளைக்கிழங்கு, கேப்ஸிகம் ஆகியவற்றை ஒரே மாதிரியான அளவில் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொண்டு எண்ணெய் சூடான பின் அதில் சீரகம், முந்திரி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக மாறிய பின் அதில் தக்காளி சேர்த்து,தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும். பின் அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
ஒரு மிக்சி ஜாரில் இஞ்சி, பூண்டு ,பச்சை மிளகாய், சோம்பு, துருவிய தேங்காய் மற்றும் மல்லித்தழை ஆகியவை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் நாம் சேர்த்த காய்கறிகள் நன்கு வதங்கிய பின்னர் இப்போது அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் அலசி வைத்துளாள் அரிசி மற்றும் ஊறிய பருப்புஆகியவை சேர்த்து கிளறி விட்டு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 விசில் வைத்து வேக விட வேண்டும். அவ்ளோதான்! சுவை மற்றும் சத்தான பாசிப்பயறு சாதம் ரெடி!