வீட்ல தேங்காய் இருந்தா போதும் தித்திப்பான "ஸ்வீட் ஃபப்ஸ்" செய்திடலாம்.

By Asianet Tamil  |  First Published Feb 22, 2023, 3:24 PM IST

வாருங்கள்! ஸ்வீட் பஃப்ஸ் ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


பள்ளி முடித்து வரும் குட்டிஸ்களுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு ஸ்னாக்ஸ் செய்து தர வேண்டும் என்றால் இந்த பஃப்ஸ் ரெசிபியை செய்து தரலாம். பொதுவாக பஃப்ஸ் என்று சொல்லும் போது வெஜ் பஃப்ஸ்,மஷ்ரூம் பஃப்ஸ்,பன்னீர் பஃப்ஸ், கார்ன் ஃபப்ஸ், சிக்கன் பஃப்ஸ் என்று பல விதங்களில் பேக்கரியில் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் ஸ்வீட் பஃப்ஸ், ரெசிப்பியை வீட்டில் செய்ய உள்ளோம். இதனை ஒரு முறை செய்து தந்தால் அடிக்கடி செய்து தருமாறு உங்கள் வீட்டு செல்ல குழந்தைகள் கேட்பார்கள். மேலும் நாம் வடை,சமோசா,புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றை சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு இப்படி செய்து சாப்பிட்டால் ஒரு நல்ல மாற்றமாக இருக்கும். இதனை மிகக் குறைந்த நேரத்தில் எளிதில் செய்து விடலாம்.

வாருங்கள்! ஸ்வீட் பஃப்ஸ் ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு- 200 கிராம்
சர்க்கரை-75 கிராம்
தேங்காய் -1/2 முடி
ஏலக்காய் -6
நெய்-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

இரத்த சோகையை தடுக்கும் "கறிவேப்பிலை பூரி" செய்து கொடுத்தால் குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதாமாவு சேர்த்து அதில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சிறிது நெய் சேர்த்து சப்பாத்தி மாவிற்கு பிசைவது போன்று பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மாவினை ஒரு ஈரத் துணி போட்டு மூடி வைத்து சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். 1/2 மணி நேரத்திற்கு பிறகு மாவினை ஒரே அளவிலான சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொண்டு அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக தேய்த்து அதன் நடுவே இந்த தேங்காய் கலவையை வைத்து பஃப்ஸ் போன்று மடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான் பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து ஒவ்வொரு ஃபப்ஸாக போட்டு பொன்னிறமாக மாறிய பின் மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுத்தால் தித்திப்பான ஸ்வீட் பஃப்ஸ் ரெடி! இறுதியாக வண்ணத் தேங்காய் துருவலை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

Latest Videos

click me!