நான்வெஜ் பக்கோடா... "மீன் பக்கோடா" செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Dec 15, 2022, 9:32 PM IST

மீனை வைத்து சுவையான மீன் பக்கோடா எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


கடல் வகையை சேர்ந்த மீன் அசைவ உணவுகளில் ஒன்றாகும். மீனில் எண்ணில் அடங்கா நன்மைகளை தருகிறது. வழக்கமாக மீன் வைத்து குழம்பு, தொக்கு அல்லது வறுத்து சாப்பிட்டு இருப்போம். இதனை தவிர மீனை வைத்து வேறு எதுவம் செய்து சாப்பிட்டு இருக்க மாட்டோம். 

அதே போன்று பக்கோடாவை ஆனியன்பக்கோடா, மஷ்ரும் பக்கோடா, காளி பஃளவர் பக்கோடா என்று பல விதங்களில் பக்கோடா செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.ஆனால் இன்று மீன் வைத்து ருசியான பக்கோடா செய்ய உள்ளோம். 

Latest Videos

undefined

மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால் கண் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் பி இருப்பதால் மைக்ரேன்(MIGRANE ) எனப்படும் ஒற்றை தலைவலி வராமல் தடுக்க உதுவுகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் டி எலும்புகளை பலம்பெற செய்கிறது. இது தவிர மீனில் இரும்பு சத்து இருப்பதால், இரத்த சோகை வராமல் தடுக்க துணை புரிகிறது. 

ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் மீனை வைத்து சுவையான மீன் பக்கோடா எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் 

மீன் துண்டுகள் - 1/4 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன் வகை)
கார்ன் பிளார் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
முட்டை - 2
உப்பு-தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

காரசாரமான சிக்கன் சுக்கா ! செய்த அடுத்த நிமிடத்தில் காலி ஆகி விடும்._

செய்முறை: 

மீன் துண்டுகளை சுத்தம் செய்து நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். பின் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.  மீன் வெந்த பிறகு முள் நீக்கி விட்டு அதனை ஒரு பௌலில் உதிர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். அதில் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

பின் அதே கலவையில் கார்ன் பிளார் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து விட வேண்டும். உதிர்த்த மீன் பீஸ்களை சேர்த்து நன்றாக கிளறி விட்டு சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், மீன் கலவையை கொஞ்சம் கையில் எடுத்து பக்கோடா போன்று கிள்ளி போட வேண்டும் இப்போது அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட்டு, பக்கோடாவை பொரித்து எடுக்க வேண்டும். அவ்ளோதாங்க! சுவையான மீன் பக்கோடா ரெடி!!!

click me!