நாவூறும் சுவையில் "முட்டை பட்டர் மசாலா செய்து சாப்பிடலாமா!

By Dinesh TGFirst Published Dec 12, 2022, 5:50 PM IST
Highlights

வாருங்கள்! சுவையான முட்டை பட்டர் மசாலாவை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் கொள்ளலாம்.

வழக்கமாக முட்டை வைத்து குழம்பு,பொரியல், ஆம்லெட்,ஆஃப் பாயில், பொடிமாஸ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் சூப்பரான முட்டை பட்டர் மசாலா செய்ய உள்ளோம். இதனை சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால், ஆஹா! இதன் சுவை அலாதியாக இருக்கும். 

மேலும் இதனை சப்பாத்தி, இட்லி,தோசை போன்றவற்றிற்கும் வைத்து சாப்பிடலாம். கொத்தி தீர்க்கும் மழையில் சூடாக இந்த முட்டை பட்டர் மசாலா செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

மேலும் இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.வாருங்கள்! சுவையான முட்டை பட்டர் மசாலாவை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

முட்டை - 6
வெங்காயம் - 2 
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1/2 -ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் 
பட்டை-1 இன்ச்
ஏலக்காய்-2
லவங்கம் -3 
உப்பு - தேவையான அளவு 
பட்டர் -தேவையான அளவு 

Butter Coffee: நுரையீரல் பிரச்சனையா உங்களுக்கு? உடனடித் தீர்வுக்கு வெண்ணெய் காபி தான் பெஸ்ட்!

செய்முறை:

முதலில் முட்டையை குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொண்டு, அதன் ஓட்டினை நீக்கி முட்டைகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பட்டர் சேர்த்து, பட்டர் உருகிய பின்னர் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.பின் முந்திரி பருப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி விட்டு, அடுத்ததாக பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி, உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும். 

இப்போது மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதன் காரத் தன்மை போகும் வரை வதக்கி விட வேண்டும். இப்போது இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு, பின் ஆற வைத்து விட்டு, மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் பட்டர் சேர்த்து உருகிய பின், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு,பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். 

மசாலா கொஞ்சம் கெட்டியாக வந்த பிறகு, அதில் வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக கீறி விட்டு சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு, கொதிக்க வைக்க வேண்டும். மசாலா முட்டையுடன் சேர்ந்த பிறகு அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். அவ்ளோதான் சூப்பரான சுவையான முட்டை பட்டர் மசாலா ரெடி!

click me!