நாம் அனைவருக்கும் சிக்கன் தம் பிரியாணி , வெஜ் தம் பிரியாணி என்றால் நன்றாக தெரியும். ஆனால் தம் பன்னீர் தெரியுமா? தெரியாதா? அப்போ இதனை படிச்சு தெரிஞ்சுக்கங்க.
ஹிமாச்சல் பிரதேசத்தின் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்று தம் பன்னீர். திருமணம் , திருவிழா என எல்லா விருந்துகளிலும் கண்டிப்பாக இந்த தம் பன்னீர் இடம் பெற்று இருக்கும். இன்னும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை தனித்துவமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இன்பத்தில் ஐயமில்லை.
பன்னீர் மூட்டு வலி, எலும்புத் தேய்மானம், பல்வலி எனப் பல்வேறு வலிகளைக்குறைக்கும் தன்மையை பெற்றது. கார்போஹைட்ரேட் , கொழுப்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் புரோடீன் ஆகியன அதிகமாககாணப்படுகிறது.
undefined
Vada Pav : மும்பை ஸ்ட்ரீட் புட் வடா பாவ் ரெசிபி! - ஈசியா செய்யலாம் வாங்க!
சரிங்க தம் பன்னீர் எப்படி செய்வது? தேவையான பொருட்களை பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பன்னீர் 200கிராம்
வெங்காயம் 1
கிராம்பு 4
ஏலக்காய் 1
பட்டை 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 3
மல்லி தூள் 1/4
சீரக தூள் 1/4
மஞ்சள் தூள் 1/2
மிளகாய் தூள் 1
கரம் மசாலா தூள் 1/2
மிளகு தூள் 1/2
பிரெஷ் கிரீம் 2 ஸ்பூன்
புதினா கையளவு
மல்லி தாலி கையளவு
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து அதனை மிக்சி ஜாரில் போட்டு மை போல அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் வெங்காயம் பேஸ்ட் டை சேர்த்து வதக்கி பின் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தயிர், சீரக தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் , மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்
Chicken Urundai : சூப்பரான சிக்கன் உருண்டை குழம்பு!
இப்போது பன்னீர்ரை சேர்த்து மசாலா அனைத்தும் ஒன்றுடன் இணையுமாறு நன்றாக மிக்ஸ் செய்துவிட்டு பின் பிரெஷ் கிரீமை சேர்த்து கிளறி விட வேண்டும்.
இப்போது இதனை பாயில் பேப்பர் போட்டு கவர் செய்து மூடி போட்டு சிம்மில் 10 நிமிடம் வைக்க வேண்டும்.அடுப்பை ஆப் செய்து விட்டு இறுதியாக புதினா மற்றும் மல்லி தழையை தூவி இறக்கி விட்டால் போதும்ங்க. சுவையான தம் பன்னீர் ரெடி! இதை ரொட்டி, பரோட்டா விற்கு ரைட் சாய்ஸ்சாக இருக்கும். என்னங்க சாப்பிடணும் போல இருக்கா? அப்போ நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க.