க்ரிஸ்பி அண்ட் க்ரன்ச்சியாக இருக்கும் ப்ரக்கோலி மசால் வடை !நீங்க ட்ரை பண்ணிருக்கீங்களா?

By Dinesh TG  |  First Published Apr 10, 2023, 9:30 AM IST

வாருங்கள்! டேஸ்ட்டான ப்ரக்கோலி மசால் வடையை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


என்னதான் மதிய சாப்பாடை வயிறு முட்ட சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் சுட சுட ஒரு காபியும் சூடான ஒரு ஸ்னாக்ஸும் செய்து கொடுத்தால் யாராக இருந்தாலும் கப்சிப்பென்று சாப்பிட்டு முடிப்பார்கள். அப்படியான ஸ்னாக்ஸில் பலரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் வடையும் ஒன்று.

வடையில் பருப்பு வடை, மீது வடை, மசால் வடை, கீரை வடை ,சோயா வடை என்று அதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அந்த வகையில் இன்று நாம் வித்தியாசமான ஒரு வடை ரெசிபியை தான் செய்ய உள்ளோம். ஆமாங்க இன்று நாம் ப்ரக்கோலி வைத்து அட்டகாசமான ஒரு வடை ரெசிபியை தான் செய்ய உள்ளோம்.

வழக்கமாக செய்யும் வடையில் இருந்து இதன் சுவை சூப்பராக இருக்கும். இதனை செய்கின்ற போதே எப்போது சாப்பிட கொடுப்பார்கள் என்று வீட்டில் உள்ளவர்கள் காத்திருப்பார்கள். இதனை ஒரு முறை செய்து பாருங்கள். பின் அடிக்கடி செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள்.

உறவினர்கள் அல்லது நண்பர்கள் என்று வீட்டிற்கு வரும் கெஸ்ட்களுக்கு இதனை செய்து கொடுத்து அவர்களின் அன்பையும், பாராட்டையும் பெறலாம். வாருங்கள்! டேஸ்ட்டான ப்ரக்கோலி மசால் வடையை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

ப்ராக்கோலி -1/4 கிலோ
துவரம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
வெங்காயம் - 1
புதினா - 2 கையளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணிநேரங்கள் வரை ஊற வைக்க வேண்டும். 2 மணி நேரதிற்கு பிறகு பருப்புக்களை தண்ணீர் இல்லாமல் வாடி கட்டி விட்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சோம்பு மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் புதினாவை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ப்ரக்கோலியை சுத்தம் செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடம் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்து பருப்பு கலவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், புதினா ,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின், மாவினை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடை போன்று தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சுவையான ப்ராக்கோலி மசாலா வடை ரெடி! 

சித்திரை மாத ராசி பலன்2023: சூரியன் உச்சத்தில் வருவதால் மிக எச்சிரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்!

Tap to resize

Latest Videos

click me!