டெய்லி காலைல இட்லி,தோசையே செய்யாம 1 தடவ சிந்தாமணி அப்பம் செய்ங்க!எத்தனை வச்சாலும் சைலன்ட்டா சாப்பிட்டுருவாங்க

By Dinesh TG  |  First Published Apr 7, 2023, 4:23 PM IST

வாருங்கள்! சுவையான சிந்தாமணி அப்பம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தினமும் ஒரே மாதிரியான இட்லி,தோசை,பொங்கல் என்று சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள். வீட்டில் உள்ள சின்னக் குழந்தைகள் இன்னைக்கும் இட்லியா என்று அலுத்து போய் தான் சாப்பிடவே அமர்வார்கள். ஆக காலை உணவை சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியம்கவும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சிந்தாமணி அப்பத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

இதற்கு சட்னி வைத்து சாப்பிடுவதால் நல்ல டேஸ்ட்டாக இருக்கும். தவிர இட்லி,தோசைக்கு மாற்றாக இதன் சுவை இருக்கும்.

வாருங்கள்! சுவையான சிந்தாமணி அப்பம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-1கப்
இட்லி அரிசி-1கப்
வர மிளகாய் -10
சின்ன வெங்காயம்- 1/2 கப்
கடலை பருப்பு-1/4 கப்
பாசி பருப்பு-1/4 கப்
துவரம் பருப்பு-1/4 கப்
கறிவேப்பிலை-1 கொத்து
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
பெருங்காயத் தூள்-தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பருப்புகள் ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி கிட்டதட்ட 6 மணி நேரங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அரிசியும்,பருப்பும் ஊறிய பின்னர் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிக்சி ஜாரில் சேர்த்துக் கொண்டு சிறிது உப்பு மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு கொரகொரவென அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவினை 4 மணி நேரங்கள் வரை புளிக்க வைக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்த பின் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயதூள் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கின அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அரைத்த மாவில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அடுப்பில் பணியார சட்டி வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த பின், மாவினை ஊற்றி விட வேண்டும். குழிகளில் சுற்றி சிறிது எண்ணெய் சுற்றி ஊற்றி, ஒரு பக்கம் வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி வெந்த பின் எடுத்து விட்டால் டேஸ்டான சிந்தாமணி அப்பம் ரெடி!

இதே போன்று அனைத்து மாவினையும் சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தக்காளி சட்னயம்,கார சட்னியும் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! இதனை சிலர் சிந்தாமணி பணியரம் என்றும் கூறுவார்கள். 

Weight Loss-உடல் எடையை குறைக்க இயற்கை தந்த குடம்புளியை ட்ரை செய்து பாருங்க!வெறும் 3 நாட்களில் சூப்பர் ரிசல்ட்

Tap to resize

Latest Videos

click me!