கேன்சர் வராமல் தடுக்கும் உணவுகளின் பட்டியல்.. இந்த 10 உணவுகள்! எத்தனை நோய் வந்தாலும் விரட்டும்..!!

By Ma Riya  |  First Published Apr 7, 2023, 7:30 AM IST

புற்றுநோய் இருப்பவர்கள் அதனுடன் போராட ஆரோக்கியமான உணவுகள் தேவை. அதைப்போல புற்றுநோய் வராமல் தடுக்க நாம் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 


புற்றுநோய்க்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் கூட ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே நோயுடன் போராட வலு கிடைக்கும். சிகிச்சை காலங்களில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், புற்றுநோயில் இருந்து தற்காத்து கொள்ள என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்

பூண்டு 

Tap to resize

Latest Videos

பூண்டு சாப்பிடும் போது குடல், கணையம் மாதிரியான வயிற்றில் உண்டாகும் புற்றுநோயை தடுக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இவை புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். அதனால் தினமும் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். 

முட்டைகோஸ்

முட்டைக்கோஸில் வைட்டமின் சி, ஏ, இ ஆகியவையும், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களும் மிகுந்து காணப்படுகின்றன. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முட்டைக்கோஸை உண்ணலாம். ஆண்மையை அதிகரிக்கும். மலச்சிக்கால் அவதிப்படுபவர்கள் நிவாரணம் பெறலாம். புற்றுநோய் வராமல் காக்கும் காய்கறிகளில் இதுவும் ஒன்று. 

காலிஃபிளவர்

காலிஃப்ளவரில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இதனை சாப்பிடும் போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படும். காலிபிளவர், முட்டைக்கோஸ் ஆகிய இரண்டும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது காய்கறிகள் ஆகும். 

முருங்கைக் கீரை

முருங்கை கீரையில் நார்ச்சத்து, கால்சியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி போன்றவையும், தாது உப்புக்களும் காணப்படுகின்றன. இதை சாப்பிட்டால் கண்கள், தோல் பொலிவுக்கு நல்லது. இதை உண்பதால் பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். மூலநோய் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். எலும்புகள் வலுவடையும். 

 

திராட்சை 

திராட்சையின் தோலில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனை உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அடிக்கடி திராட்சை பழங்களை உண்பதால் புற்று செல்கள் வளர்ச்சி தடைபடும் என ஆய்வுகள் கூறுகின்றன. 

இஞ்சி 

ஆயுர்வேதத்தின் படி இஞ்சியை எடுத்துக் கொள்வது பல்வேறு நன்மைகளை தருகிறது. புற்றுநோய் பாதித்தவர்கள் ஹீமோதெரபிக்கு முன்பு இஞ்சி உண்பதால் குமட்டல் உணர்வு ஏற்படாமல் மட்டுப்படும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. இஞ்சி பல உடல் நலக்கோளாறுகளுக்கு தீர்வளிக்கும். 

மஞ்சள் தூள் 

மஞ்சள் தூளில் இருக்கும் பாலிபீனால் குர்குமின், புற்று செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தும். மஞ்சளை உணவில் எடுத்து கொள்வது கிருமிநாசினி போல செயல்படுகிறது. மஞ்சள் சரும நோய்களை போக்கும். காயங்களுக்கும், கட்டிகள் உடையவும், தேமலை நீக்கவும், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவார்கள். 

இதையும் படிங்க: ஊறவைத்த வால்நட் பருப்பு..! வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால், இத்தனை நன்மைகள் கிடைக்கும்!!

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து மிகுந்து காணப்படுகிறது. அதுமட்டுமில்லை, வைட்டமின் சி, பி, பி2 ஆகியவை இருக்கின்றன. இதை உண்பதால் சிறுநீரக தொற்று குறையும். மூட்டு வலி கால் வலி இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை உண்ணலாம். புற்றுநோய்க்கு எதிராக செயல்பட உதவும். தூக்கமின்மையால் அவதிபடுபவர்கள் ஆரஞ்சு பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். 

எலுமிச்சை 

நம் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தால் ஏற்படும் வலி, வீக்கம் ஆகியவற்றை எலுமிச்சை குறைக்கும். நாள்தோறும் எலுமிச்சை சாறு அருந்தினால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையும். கல்லீரலை சுத்தம் செய்கிறது. உடலில் யூரிக் அமிலம் தங்காமல் தடுப்பதில் எலுமிச்சை சாறின் பங்கு அளப்பரியது. இவை எலும்புகளுக்கும், தசைகளுக்கும் பலத்தை கொடுக்கிறது. 

மாதுளை

மாதுளை பழத்தில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, மாவுச்சத்து ஆகியவை அதிகமுள்ளன. இதை உண்பதால் உடலில் நச்சுக்கள் வெளியேறும். இது சிறந்த நச்சு நீக்கியாக செயல்படும். இதய நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்கும். மலச்சிக்கல் தொல்லையா? தொடர்ந்து 3 நாட்கள் மாதுளை சாப்பிட்டு பாருங்கள். மாற்றத்தை உணர்வீர்கள். சிறுநீரக நோயாளிகளுக்கு இந்த பழம் வேண்டாம். இதை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. 

இதையும் படிங்க: வெயிலுக்கு தயிர் ரொம்ப சாப்பிடுறீங்களா! இந்த 5 தவறுகளை மட்டும் பண்ணாதீங்க! மத்தபடி ரொம்ப நல்லது!

click me!