பொதுவாக நாம் அனைவரும் தேங்காய் போளி,பருப்பு போளி என்று தான் சுவைத்து இருப்போம் .இம் முறை கொஞ்சம் வித்தியாசமாக இதுவரை செய்து சுவைத்திடாத , சுரைக்காய் சேர்த்து ஆரோக்கியமான போளியை செய்து பார்ப்போமா?
சுரைக்காய் போன்ற காய்களை சாம்பார், பொரியல் , கூட்டு என்று செய்து கொடுத்தால் குழந்தைகள் உண்ணாமல் இருக்காங்களா? அப்போ இந்த மாதிரி அவர்கள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட்களில் செய்து கொடுங்கள்
பொதுவாக நாம் அனைவரும் தேங்காய் போளி,பருப்பு போளி என்று தான் சுவைத்து இருப்போம் .இம் முறை கொஞ்சம் வித்தியாசமாக இதுவரை செய்து சுவைத்திடாத , சுரைக்காய் சேர்த்து ஆரோக்கியமான போளியை செய்து பார்ப்போமா?
வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் விதமாக இதன் சுவை இருக்கும். சுவையான மற்றும் ஆரோக்கியமான சுரைக்காய் போளி செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சுரைக்காய் போளி செய்ய தேவையான பொருட்கள்:
காய்கறி பொரியல் தெரியும்? இது என்ன சிக்கன் பொரியல்?
மைதா - 1 கப்
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பூரணம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
துருவிய சுரைக்காய் - 1 கப்
பால் - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
கலர் பவுடர் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு சப்பாதி மாவை போன்று நன்கு சாஃப்டாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்த பின்,சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
Sweet corn Masal vada : பருப்பு சேர்க்காமல் மசால் வடை செய்வோமா?
சுரைக்காய் வதங்கிய பின் பால் சேர்த்து ,சுரைக்காய் நன்றாக வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.கொதிக்கும் போது அதில் சர்க்கரை மற்றும் கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இந்த கலவையானது கெட்டியாக வரும் போது, அதில் சிறிது நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கி ஆற வைத்து விட வேண்டும்
கலவையானது ஆறியபின்பு ,மாவை கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் வைத்து , சப்பாத்தி போன்று தேய்த்து நடுவில் சிறிது சுரைக்காய் கலவையை வைத்து, நான்கு பக்கமும் மடித்து விட்டு , பின் ஒருமுறை லைட்டாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் தோசைக் கல்லை வைத்து காய்ந்ததும், அதில் சிறிது நெய் தடவி , தீயனை சிம்மில் வைத்து தேய்த்து வைத்துள்ள போளியை போட்டு, சுற்றி நெய் ஊற்றி முன்பக்கம் வெந்த பின் பின் பக்கம் திருப்பி போட்டு நன்கு வேக வைத்து இறக்கினால், ஆரோக்கியமான சுரைக்காய் இனிப்பு போளி ரெடி!!!