கிராமத்து மண் வாசனையுடன் மண் சட்டியில் கோழிக்கறி குழம்பு!

By Dinesh TG  |  First Published Oct 22, 2022, 12:45 AM IST

கிராமத்து ஸ்டைலில் கோழிக்குழம்பு வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க


வழக்கமாக நாம் அசைவ வகைகளை குக்கரில் அல்லது கடாயில் வைத்து தான் சமைத்து சாப்பிடுவோம். இந்த முறை ஒரு மாற்றாக, கிராமத்து ஸ்டைலில் மண் சட்டியில் கோழிக்கறி குழம்பு சமைத்து சாப்பிடலாம் வாங்க. மண்சட்டியில் சமைப்பதால் அதன் சுவை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். 

கிராமத்து ஸ்டைலில் கோழிக்குழம்பு வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)

Protein Powder : பாடி பில்டர்களே உஷார்: புரோட்டீன் பவுடரால் அதிக ஆபத்து!

பச்சை மிளகாய் - 4 
வர மிளகாய் - 8
தனியா விதை - ஒரு கையளவு 
கசகசா - 1 ஸ்பூன் 
சோம்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
பூண்டு - 2 பல் 
இஞ்சி - 1 துண்டு
தேங்காய் - 1/2 முடி துருவியது 
ஏலக்காய் - சிறிதளவு
பட்டை- 1 இன்ச் 
கிராம்பு-3
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லி தழை - கொஞ்சம் 
நல்லெண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் கோழிக்கறியை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் விடாமல் மிளகு, சீரகம்,தனியா,வர மிளகாய்,சோம்பு மற்றும் கசகசா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்த பின் அதனை மிக்சர் ஜாரில் போட்டு நைசான பொடியாக அரைத்துக் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் அரைத்து கொள்ள வேண்டும்.

Soya Vada : ஆரோக்கியமான மீல்மேக்கர் வடை செய்யலாம் வாங்க !

அடுப்பில் மண் சட்டி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை உரித்து போடவும். அனைத்தும் சிவந்த பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின்,தக்காளி போட்டு, தக்காளி மசிந்த பின் அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு அதன் வாசனை செல்லும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும். பின் அதில் சுத்தம் செய்துள்ள கோழிக்கறி,மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு பிரட்டி எடுத்து வதக்கி விட வேண்டும்.

இப்போது மிக்சி ஜாரில் துருவிய தேங்காயை போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து தேங்காய் பாலை ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்  கோழிக்கறி நன்கு வெந்த பிறகு, அரைத்த மிளகாய் மற்றும் தேங்காய் பால் ஊற்றி வதக்கி விட்டு , கறி முழுகும் அளவு நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.  குழம்பு கொதித்து கெட்டியாக வரும்போது இறக்கி வைத்து விட்டு கறிவேப்பிலை, மல்லி தழை போடவும். சுவையான கிராமத்து கோழிக் குழம்பு தயார்!

click me!