கசப்பே தெரியாம பாகற்காய் ரசம் செய்யலாமா?

By Asianet Tamil  |  First Published Feb 26, 2023, 5:17 PM IST

பாகற்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் நாள்பட்ட மலச்சிக்கல், நீரிழிவு, ஆஸ்துமா, இருமல் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. அப்படிப்பட்ட பாகற்காய் வைத்து ருசியான ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் ரசம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நாம் சாப்பிடும் சாப்பாட்டை செரிமானம் செய்வதற்கு ரசம் பெரிதும் துணை புரிகிறது. ரசத்தில் எலுமிச்சை ரசம், தக்காளி ரசம், புதினா ரசம், பருப்பு ரசம் என்று பல விதமான ரசம் செய்து சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் பாகற்காய் வைத்து ரசம் செய்ய உள்ளோம். பாகற்காயை பொரியல், சாம்பார், குழம்பு என்று செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். பாகற்காய் வைத்து ரசம் செய்துள்ளீர்களா? இல்லையா ? அப்போ இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பாகற்காயில் இரும்பு, வைட்டமின் சி, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களின் நிறைந்து காணப்படுவதால் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. இதன் சுவை கசப்பாக உள்ள காரணத்தால் இதனை பலரும் விரும்பி சாப்பிட தயக்கம் காட்டுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இதனை சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு இம்மாதிரி ரசம் செய்து கொடுப்பதன் மூலம் பாகற்காயின் முழு பயனும் அனவைருக்கும் கிடைக்கும்.

பாகற்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் நாள்பட்ட மலச்சிக்கல், நீரிழிவு, ஆஸ்துமா, இருமல் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. அப்படிப்பட்ட பாகற்காய் வைத்து ருசியான ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்:

நீட்ட பாகற்காய் - 4
புளி –லெமன் சைஸ்
பொடித்த வெல்லம் -1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
மல்லித் தழை -கையளவு
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு:

வர மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
கடுகு- 1/4 ஸ்பூன்
வெந்தயம் -1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு

க்ரிஸ்பி அண்ட் ஹெல்த்தி ஸ்னாக்ஸ் கொள்ளு வடை!

செய்முறை:

முதலில் பாகற்காயை அலசிக் கொண்டு நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். புளியை ஒரு பௌலில் போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரிந்து வைத்துள்ள பாகற்காயை சேர்த்து சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, புளிக்கரைசல் ஊற்றி ஒரு தட்டு போட்டு மூடி,அடுப்பின் தீயனை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும்.

பாகற்காய் வெந்த பின் புளிக்கரைசல் பார்க்க ரசம் போன்று வந்த பின் அதில் பொடித்த வெல்லம் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அடுப்பில் இப்போது ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வர மிளகாய்,வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளித்து அதனை பாகற்காய் ரசத்தில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி இறக்கினால் பாகற்காய் ரசம் ரெடி!

Latest Videos

click me!