வாருங்கள்! ருசியான வாழைப்பூ பணியாரம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் அனைவரும் பல விதமான காய்கறிகளை நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் எடுத்துக் கொள்வோம். அதில் பலரும் ஒரே விதமான காய்கறிகளை ஒரே விதமாக சமைத்து அலுத்து போய் இருப்போம். மேலும் பல சத்தான காய்கறிகளான பாகற்காய், வாழைப்பூ போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். இவைகளின் கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை காரணமாக இவைகளை பெரும்பாலானோர் விரும்பி சமைப்பதில்லை.
பெரியவர்கள் கூட வாழைப்பூ, பாகற்காய் போன்ற காய்கறிகளை சாப்பிட தயங்குகின்றனர். அப்படியெனில் சிறியவர்கள்? அவர்களும் சாப்பிட மறுப்பார்கள். இப்படி அனைவரும் சாப்பிட மறுக்கும் காய்கறிகளுள் ஒன்றான வாழைப்பூ வைத்து சுவையான ஒரு ரெசிபியை காண உள்ளோம்.வழக்கமாக வாழைப்பூ வைத்து பொரியல், வடை போன்றவையை அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இம்முறை வாழைப்பூ வைத்து காரப் பணியாரம் செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
வாருங்கள்! ருசியான வாழைப்பூ பணியாரம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
undefined
இனி வீட்டின் விஷேஷ தினங்களில் பாரம்பரியமான பூந்தி லட்டு செய்யலாம்.
செய்முறை:
முதலில் வாழைப்பூவை நன்கு ஆய்ந்து அலசிக் கொண்டு அதனை பொடியாக அரிந்து மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, புழுங்கல் அரிசி ஆகியவையை சேர்த்து தண்ணீர் ஊற்றி சுமார் 1 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது கிரைண்டரில் ஊறிய பருப்பு மற்றும் அரிசியை தண்ணீர் வடிகட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் வர மிளகாய், தக்காளி, இஞ்சி, மிளகு ஆகியவை சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி, நெய் உருகிய பின்னர் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வாழைப்பூ சேர்த்து 5 நிமிடங்கள் வரை வதக்கி விட வேண்டும்.பின் அதனை அரைத்து வைத்துள்ள மாவினில் சேர்த்து உப்பு போட்டு நன்றாக கலந்துக்க கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பணியாரக் கல் வைத்து நெய் ஊற்றி, இந்த மாவினை குழிகளில் ஊற்றி சுற்றி நெய் ஊற்றி வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு வெந்த பின் எடுத்தால் சூப்பரான வாழைப்பூ பணியாரம் ரெடி!