வாருங்கள்! யம்மி மஷ்ரூம் பட்டர் மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக இரவு நேரத்தில் சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக குருமா, பன்னீர் பட்டர் மசாலா போன்றவையை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் மஷ்ரூம் வைத்து அட்டகாசமான 1 ரெசிபியை பார்க்க உள்ளோம். பொதுவாக மஷ்ரூம் வைத்து மஷ்ரூம் மசாலா, மஷ்ரூம் சூப், மஷ்ரூம் பிரியாணி போன்றவை செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று மஷ்ரூம் பட்டர் மசாலா ரெசிபியை காண உள்ளோம்.
இந்த ரெசிபி ப்ரைட் ரைஸ், சப்பாத்தி, புல்கா,நாண் போன்றவைக்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். மேலும் இதனை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வஃயில் இதன் சுவை இருக்கும்.
வாருங்கள்! யம்மி மஷ்ரூம் பட்டர் மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
அரைக்க:
undefined
இட்லிக்கு இப்படி “தயிர் கார சட்னி” வைத்து சாப்பிட்டால் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்றே தெரியாது!
செய்முறை:
முதலில் மஷ்ரூமை அலசி ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை ஒன்று இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் முந்திரி மற்றும் தக்காளி ஆகியவை சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து சூடான அதில் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி முந்திரி பேஸ்ட் சேர்த்து, உப்பு சேர்த்து சுமார் 7 நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து வதக்கி விட வேண்டும். பிறகு கரம் மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து 1/2 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கிளறி விட வேண்டும்.
பின் மஷ்ரூமை சேர்த்து கிளறி விட்டு மஷ்ரூமில் இருந்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும். தண்ணீர் அனைத்தும் வற்றிய பிறகு சேர்த்து கிளறி ப்ரஷ் க்ரீம் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி கஸ்தூரி மேத்தியை தூவி பரிமாறினால் சூப்பரான மஷ்ரூம் பட்டர் மசாலா ரெடி!