மீண்டும் மீண்டும் கேட்டு சுவைக்க தோன்றும் "ஆந்திரா சிக்கன் வறுவல்"!

By Dinesh TG  |  First Published Jan 2, 2023, 8:43 PM IST

இன்று நாம் சூப்பரான ஆந்திராவின் காரசாரமான சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


ஆந்திரா உணவு வகைகளில் பிரியாணியும் ,சிக்கனும் மிக பிரபலம்.ஆந்திரா மாநிலத்தின் உணவுகள் பெரும்பாலும் காரசாரமான ருசியை தன்னகத்தே கொண்டு இருக்கும். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான ஆந்திராவின் காரசாரமான சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:

Latest Videos

undefined

மிளகு - 1 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
சோம்பு -1 ஸ்பூன்
தனியா - 1½ ஸ்பூன் 
வர மிளகாய் - 6
காஷ்மீரி மிளகாய் - 4
ஏலக்காய் - 3
லவங்கம் - 4
பட்டை - 1 இன்ச் 

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் சேர்க்காமல் பட்டை, லவங்கம் , சீரகம், சோம்பு, மிளகு, தனியா,ஏலக்காய், காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ,மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஆற வைத்து பின் மிக்சி ஜாரில் சேர்த்து பொடி போன்று அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

வறுவலுக்குத் தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 5 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 2 கொத்து 
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

அடுப்பு இல்லாமல் ஒரு ரெசிபியை செய்யலாமா - "பேல் பூரி"!

செய்முறை:

முதலில் சிக்கனை உப்பு ,மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் வெங்காயத்தை பொடிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்த பின் அதில் வதக்கி கொள்ள வேண்டும். பின் அதில் மிளகாயை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். .

அடுத்தபடியாக அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட்டு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் அரைத்த மசாலாதூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். சிக்கனில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொஞ்சம் கறிவேப்பிலை தூவி அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால் ருசியான ஆந்திரா சிக்கன் வறுவல் ரெடி!

click me!