கரிப்பினி பெண்களுக்கு நலம் தரும் "ராஜ்மா" ரெசிபி!

By Dinesh TG  |  First Published Jan 2, 2023, 7:40 PM IST

வாருங்கள்! ருசியான சில்லி ராஜ்மாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


வட இந்தியாவில் ஆலூ மட்டர் , தால் மக்கானிக்கு அடுத்தபடியாக அதிகமாக பிரசத்தி பெற்ற ஒரு உணவு என்றால் அது ராஜ்மா ரெசிபி தான்.

ராஜ்மாவில் அதிக அளவு இரும்பு, புரதம், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் உள்ளதால் இதனை அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவு என்று கூறலாம் . அதிலும் குறிப்பாக இதில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் இருப்பதால் கரிப்பினி பெண்கள் இதனை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டால் , கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. 

Tap to resize

Latest Videos

இந்த ராஜ்மா வைத்து சுண்டல், கிரேவி, சப்ஜி என்று பல விதங்களில் சமைக்கலாம். அந்த வகையில் இன்று நாம் ராஜ்மா வைத்து ஸ்பைசியான சில்லி ராஜ்மாவை காண உள்ளோம். இதனை பூரி, சப்பாத்தி,புல்கா,சாதம் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட அருமையாக இருக்கும். 

வாருங்கள்! ருசியான சில்லி ராஜ்மாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

ராஜ்மா - 1 கப்
இஞ்சி - 1 ஸ்பூன் 
பூண்டு - 1 ஸ்பூன்
சீரக த்தூள்-1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியாத் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 
மல்லித்தழை-கையளவு 
உப்பு- தேவையான அளவு 
எண்ணெய்- தேவையான அளவு 

அடுப்பு இல்லாமல் ஒரு ரெசிபியை செய்யலாமா - "பேல் பூரி"!

செய்முறை:

முதலில் ராஜ்மாவை ஒரு பௌலில் போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டினை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழை மற்றும் மிளகாயை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் ஊற வைத்துள்ள ராஜ்மாவை போட்டு, தண்ணீர் ஊற்றி மூடி விட்டு சுமார் 8 விசில் வரை வேக வைத்துக் கொண்டு அடுப்பில் இருந்து இறக்கி .விட வேண்டும். விசில் அடங்கிய பிறகு குக்கர் திறந்து ராஜ்மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின்பு சீரகம் தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக அதில் துருவிய இஞ்சி, பூண்டு, பொடியாக அரிந்து வைத்துள்ள பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். 

பின் அதில் மிளகாய் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா,சீரகத் தூள் முதலியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இப்போது கடாயில் வேக வைத்துள்ள ராஜ்மாவை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு,பின் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். 

கலவை கொதித்த பின் அதில் மல்லித்தழையை தூவி இறக்கினால் ருசியான சில்லி ராஜ்மா ரெடி!

click me!