அடுப்பு இல்லாமல் ஒரு ரெசிபியை செய்யலாமா - "பேல் பூரி"!

By Dinesh TG  |  First Published Jan 2, 2023, 6:38 PM IST

வாருங்கள்! ருசியான பேல் பூரியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் தெரிந்து கொள்ளலாம்.


ஒவ்வொரு ஊரிலும் பிரசித்தி பெற்ற உணவுகள் பல இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் மும்பை நகரின் பிரசத்தி பெற்ற ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை காண உள்ளோம். மும்பை ஸ்ட்ரீட் புட்களில் ஒன்றான பேல் பூரியை இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.இது வழக்கமாக நாம் சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. 

இந்த ரெசிபியை.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை இருக்கும். வாருங்கள்! ருசியான பேல் பூரியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:

பொரி - 1 கப்
தட்டுவடை - 4 
எண்ணெய் கடலை - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1 ஸ்பூன்
தக்காளி - 1 
நறுக்கிய மாங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1/4 கப் 
க்ரீன் சட்னி - தேவையான அளவு
டொமேட்டோ சாஸ் - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு 
ஓமப்பொடி - தேவையான அளவு 
லெமன் ஜூஸ்- 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
சாட் மசாலா - 1/4 ஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 ஸ்பூன் 
மல்லித்தழை- கையளவு 

முகப்புப் பயன்பாட்டில் முழு டிவி கட்டுப்பாடுகளை Google அறிமுகப்படுத்துகிறது: அனைத்து விவரங்களும்

செய்முறை: 

முதலில் தக்காளி, மாங்காய் மற்றும் வெங்காயத்தை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கிழங்கினை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் இருந்து குக்கரை இறக்கி வைத்து, விசில் அடங்கியவுடன் குக்கர் திறந்து வெந்த கிழங்கினை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் பொரியைப் போட்டு, அதில் தட்டு வடையை கைகளால் பொடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் மசித்த கிழங்கு ,வெங்காயம், தக்காளி, மாங்காய், எண்ணெய் கடலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

பின் அதில் க்ரீன் சட்னி, டொமேட்டோ சாஸ், ஊற்றிக் கொண்டு அதன் மேல் சீரகத்தூள் ,சாட் மசாலா, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சிட்டிகை அளவு தூவி விட வேண்டும். இறுதியாக லெமன் ஜூஸ் பிழிந்து,அதன் மேல் ஓமப்பொடி மற்றும் மல்லித்தழை தூவி பரிமாறினால் மும்பை ஸ்ட்ரீட் புட் பேல் பூரி ரெடி!

click me!