Masala Pongal | இந்த பொங்கலுக்கு மணமணக்கும் மசாலா பொங்கல் செய்யலாம் வாங்க...!

By Dinesh TG  |  First Published Jan 10, 2023, 4:22 PM IST

வாருங்கள்!ருசியான மசாலா பொங்கலை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 


வழக்கமாக பொங்கல் திருநாளின் போது நம்மில் பலரும் வெண்பொங்கலை தான் காலை உணவாக எடுத்துக் கொள்வோம். இந்த முறை சற்று மாற்றாக மசாலா பொங்கலை செய்து சாப்பிடுங்கள். இதனை ஒரு முறை செய்து பாருங்கள். பின் இதனையே அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.

வாருங்கள்!ருசியான மசாலா பொங்கலை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி - 1 கப்
  • பாசி பருப்பு 1/2 கப்
  • மஞ்சள் தூள் -2 ஸ்பூன்
  • தண்ணீர் - 3 கப்
  • கடுகு - 1 ஸ்பூன்
  • மிளகு - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • இஞ்சி -1 ஸ்பூன்
  • முந்திரி - 3 ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய்-2
  • தக்காளி - 2 ஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை சிறிது
  • துருவிய தேங்காய் -4 ஸ்பூன்
  • எண்ணெய் -தேவையான அளவு
  • நெய்-தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

பொங்கல் 2023 - கொஞ்சம் வித்தியாசமாக திணை கருப்பட்டி பொங்கல் செய்யலாம் வாங்க!
 

Tap to resize

Latest Videos

செய்முறை:

முதலில் பச்சரிசி, பாசி பருப்பு ஆகியவற்றை அலசி விட்டு அதனை ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குக்கரில் மஞ்சள் தூள், உப்பு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து 2 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொண்டு நெய் சூடான பின் கடுகு, மிளகு, சீரகம், பச்சை மிளகாய் மற்றும் அரிந்து வைத்துள்ள இஞ்சி முதலியவற்றை சேர்த்து வதக்கி விட்டு, பின் அதில் முந்திரி பருப்பினை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொண்டு அதில் சிறிது பெருங்காயத் தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும். இப்போது இதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விட்டு, பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். பின் குக்கரில் வேக வைத்து எடுத்துள்ள பச்சரிசி மற்றும் பருப்பினை சேர்த்து நன்கு குழையுமாறு கலந்து விட வேண்டும்.பின் இறுதியாக மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான மசாலா பொங்கல் ரெடி!

click me!