Moong Dal Laddu : அனைவருக்கும் ரைட் சாய்ஸ் மூங் தால் லட்டு!

By Dinesh TG  |  First Published Oct 9, 2022, 12:10 PM IST

கடைகளில் கிடைக்கின்ற தின்பண்டங்களை விடவும் இது ஆரோக்கியம் வாய்ந்தது. ஆரோக்கியத்தை பரிசாக அளிக்கும் பாசிப்பருப்பு உருண்டையை எப்படி செய்வது என்பதனை பற்றி இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


பாசிப்பருப்பு அல்லது சிறு பருப்பு என்றழைக்கப்படும், இந்த பருப்பை வைத்து சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பாசிப்பருப்பு உருண்டையை வீட்டில் சுவையாக எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்வோம். இதனை நெய் உருண்டை என்றும் அழைப்பர். இந்த உருண்டைகளை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பும் ஸ்னாக்ஸ் பாக்ஸில் 2 கொடுத்தாலே போதும். அளவற்ற சத்துக்கள் குழந்தைகள் பெறுவர் . 

மேலும் பெரியர்வர்களும் பணி முடிந்து சோர்வாக வரும் போது இந்த உருண்டைகள் எடுத்துக் கொண்டால் மிகுந்த சக்தி பெறுவார். மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு என்றால் பாசிப்பருப்பு உருண்டையை கூறலாம். கடைகளில் கிடைக்கின்ற தின்பண்டங்களை விடவும் இது ஆரோக்கியம் வாய்ந்தது. ஆரோக்கியத்தை பரிசாக அளிக்கும் பாசிப்பருப்பு உருண்டையை எப்படி செய்வது என்பதனை பற்றி இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

Tap to resize

Latest Videos

பாசிபருப்பின் மகத்துவம்:

பருப்பு வகைகளிலே அதிக அமினோ அமிலங்கள் கொண்டுள்ள பருப்பு எனில் பாசி பருப்பு தான். இதில் அதிகமாக காணப்படும் நார்சத்து மற்றும் புரோட்டீனால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது .வளரும் குழந்தைகளுக்கு பாசி பருப்பும் நெய்யும் சேர்த்து தருவதால் அதிக நினைவாற்றல், அதிக நோய் எதிர்ப்பு திறன் பெறுவர். மேலும் சுறுசுறுப்பாக இயங்குவர் .தினமும் இந்த பருப்பை உணவில் எடுத்துக் கொண்டால் இரத்த சோக நோய் ஏற்படாது. 

குழந்தைகள் விரும்பும் சோயா கட்லெட்!- ஹெல்தியான ஈவினிங் ஸ்னாக்ஸ்!

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு 1 கப் 
நெய் 1/2 கப்
சர்க்கரை 1 கப் 
ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன் 
முந்திரி பருப்பு 10 

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து பாசிப்பருப்பை எண்ணெய் சேர்க்கமால் மிதமான சூட்டில் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் போல் அரைத்து சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளவேண்டும். அடுத்து சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டு அதனையும் பவுடர் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Millet Kolukkattai : சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்த தினை கொழுக்கட்டை!

ஒரு pan இல் சிறிது நெய் சேர்த்து சூடானதும் , முந்திரிகளை பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். ஒரு விலாசமான பாத்திரத்தில் அல்லது பெரிய தட்டில் பாசிப்பருப்பு பவுடர், சக்கரைபவுடர், ஏலக்காய் தூள்,வறுத்த முந்திரிகள் மற்றும் சூடான சிறிது நெயினையும் சேர்த்து நன்றாக பிசையவும். பின் சப்பாத்தி மாவு பதம் போல் பிசைந்து, பின் கைகளால் சின்ன சின்ன உருண்டைகளாகப் பிடித்து எடுக்கவும்.

அவ்வளவு தாங்க! சுவையான மற்றும் ஆரோக்கியத்தை தரும் பாசி பருப்பு உருண்டை தயார்!

click me!