Millet Kolukkattai : சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்த தினை கொழுக்கட்டை!

By Dinesh TG  |  First Published Oct 8, 2022, 1:51 PM IST

இனிப்பு மற்றும் காரம் சேர்த்து நமக்கு பலவிதமான கொழுக்கட்டை.கள் தெரிந்து இருக்கலாம். இன்று நாம் பாரம்பரியமான சிறுதானியமான தினை வைத்து தினை கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.


அரிசி மாவில் செய்வதை காட்டிலும் இது ஆரோக்கியமானது மற்றும் சுவையானத .குறைந்த நேரத்தில் எளிமையாக செய்யக்கூடிய இந்த சுவையான தினை கொழுக்கட்டையானது குழந்தைகள், பருவம் அடைந்த பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற ஒரு சிற்றுண்டி என்று சொல்லலாம்.வாரம் ஒரு முறையாவது தினை அரிசியினை நமது உணவில் எடுத்துக் கொள்வதால் நமது ஆரோக்கியமானது மேம்படும். 

பாரம்பரியமிக்க , சுவையான மற்றும் ஆரோக்கியமான தினை கொழுக்கட்டை செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க.

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:

தினை – ½ கப் 
வர மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – ½ ஸ்பூன் 
கடுகு – ½ ஸ்பூன் 
பெருங்காயத் தூள் –2 சிட்டிகை 
கருவேப்பிலை – ஒரு கொத்து 
எண்ணெய் – 1 ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு

வீட்டிலேயே செய்யலாம் -பிரட் பீசா!

செய்முறை:

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தினை சேர்த்து , தீயை சிம்மில் வைத்து ,வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.அதனை ஆற வைத்து கொண்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு Pan இல் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் ,கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் தாளித்து கொள்ள வேண்டும்.பின் அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

.தண்ணீர் கொதித்து வரும் வேளையில், அரைத்து எடுத்து வைத்துள்ள தினையை சேர்த்து, தீயை சிம்மில் வைத்து கொஞ்சம் கெட்டியாக மாறும் வரை கிளறி விட்டு, பின்பு அடுப்பை ஆப் செய்து விட்டு, மூடி போட்டு ஆறவிட வேண்டும். கொஞ்சம் ஆறிய பின்பு ஒரு கிண்ணத்தில் மாற்ற , பிசைந்து கொண்டு, அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி அழுத்திப் பிடிக்க வேண்டும்.

சுவையான கேரள வாழை இலை மீன்! செய்வது எப்படி?

அடுத்து ஒரு இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி , செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை தட்டின் மீது வைத்து,  இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் இட்லி தட்டை வைத்து சுமார் பத்து நிமிடங்கள் வேக விட வேண்டும்.

பின்பு அடுப்பை ஆப் செய்து விட்டு ஒரு 5 நிமிடங்கள் சென்ற பின் இட்லி தட்டிலிருந்து எடுத்து வைக்கவும். சுவையான, ஆரோக்கியம் நிறைந்த தினை கொழுக்கட்டை ரெடி! நீங்களும் இதனை ட்ரை பண்ணி பாருங்க.

click me!