Kerala Banana Leaf Fish : சுவையான கேரள வாழை இலை மீன்! செய்வது எப்படி?

By Dinesh TG  |  First Published Oct 7, 2022, 5:51 PM IST

வாழை இலையில் மீனை வேக வைக்கும் பொழுது அதன் சத்துக்கள் வெளியேறாமல் காக்கப்படுகிறது. சரி இந்த கேரள வாழை இலை மீனை எப்படி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


அசைவ பிரியர்களில் பலருக்கும் பிடித்தது என்றால் கடல் உணவுகள் தான். அதிலும் குறிப்பாக மீன் தான் அனைத்து இடங்களிலும் மற்றும் பல விதங்களில்  கிடைக்கும். உங்களுக்கு கடல் உணவுகள் பிடிக்குமேயானால், இந்த ரெசிபி நிச்சயமாக உங்கள் பேவரைட் ஆக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.இதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி கூறுகையில் , அதிக ஊட்டச்சத்துகள்கொண்டுள்ளதாக இருக்கிறது. 

வாழை இலையில் மீனை வேக வைக்கும் பொழுது அதன் சத்துக்கள் வெளியேறாமல் காக்கப்படுகிறது. சரி இந்த கேரள வாழை இலை மீனை எப்படி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Tap to resize

Latest Videos

Madurai Kari Dosa : மணக்கும் மதுரை கறி தோசை!

தேவையான பொருட்கள்:

வஞ்சீரம் (அ) பாறை மீன் - 2 துண்டுகள்
பெரியவெங்காயம் – 1
தக்காளி –1
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் 
இஞ்சி- 1 இன்ச் 
பூண்டு-4 பல் 
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
வாழை இலை - 2 துண்டுகள்

செய்முறை:

முதலில் வாங்கி வந்த மீனை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின் மீனை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் அல்லது பெரிய தட்டில் , மீன் துண்டுகள் வைத்து அதன் மேல் ,எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். 

கம கம வாசனையில் ஆளை தூக்கும் ஆம்பூர் பிரியாணி!

இப்போது தேங்காய்,பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு மற்றும் மல்லி இலை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்னெய் சேர்த்து, எண்ணெய் சூடான பின் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். 

இந்த கலவையை ஊற வைத்துள்ள மீன் துண்டுகளின் மேற்பரப்பில் ஸ்ப்ரெட் செய்ய வேண்டும். (மீனை வறுத்தும் சேர்த்துக்கொள்ளலாம்). பின்னர் ஃபிரஷான வாழை இலையில் , மசாலா சேர்த்த மீனை வைத்து, மடித்து அதனை நூல் கொண்டு கட்டி விட்டு , இட்லி வேக வைக்கும்பாத்திரத்தில் அல்லது தவாவில் வேக விட வேண்டும். மிதமான சூட்டில் வேக வைத்தால் மீனின் அனைத்து பகுதிகளும் ஒரே மாதிரியாக வேகும். 

வாழை இலையின் நிறம் சற்று மாறி வரும் வேளையில் மீன் வெந்து இருப்பதை அறிய முடியும். வெந்த மீனின் மணம் வாழை இலையின் நறுமணத்துடன் கலந்து வரும். ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து வாழை இலையை பிரித்து எடுத்தால் , அட ! அட! கம கமக்கும் கேரளா ஸ்பெஷல் வேக வைத்த மீன் தயார்!

click me!