Wheat Rava Kesari : உடலுக்கு வலு சேர்க்கும் கோதுமை ரவை கேசரி!

By Dinesh TG  |  First Published Oct 8, 2022, 2:53 PM IST

நாம் பொதுவாக கேசரி என்றால் ரவையில் அல்லது சேமியாவில் தான் செய்து சுவைத்திருப்போம். ஆனால் இன்று சற்று வித்தியாசமாக கோதுமை ரவை கொண்டு கேசரியை செய்யலாமா?


உடைத்த கோதுமையை கொண்டு உப்புமா, பாயசம், கேசரி செய்யலாம். இதனை இறைவனுக்கு பிரசாதமாகவும் படைக்க ஏற்றது. விருந்தினர்களை உபசரிக்க, விடுமுறை நாட்களில் கொஞ்சம் வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும் செய்து சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் கோதுமை ரவை மற்றும் வெள்ளம் சேர்த்து செய்யப்படுவதால் வயதானவர்களுக்கும் ஏற்ற ஒரு இனிப்பு ஆக உள்ளது. 

அரிசி ரவை போலவே ,கோதுமை ரவையிலும் கேசரி செய்யலாம். உடைத்த கோதுமையை கொண்டு செய்யக்கூடிய இந்த கேசரியில், சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்ப்பதால் ஆரோக்கியமான ஒரு இனிப்பு வகை என்றும் கூறலாம். ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு மற்றும் நெய் போன்றவற்றை சேர்ப்பதால் கமகம என்று மணமாக இருக்கக் கூடிய இந்த கோதுமை ரவை கேசரியை எப்படி செய்யலாம் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை – 1 கப் –250 கிராம் 
வெல்லம் – 2 கப் – 500 கிராம் 
நெய் – 4 ஸ்பூன் 
வறுத்த முந்திரி பருப்பு – 10 
ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன் 
உப்பு – 1 சிட்டிகை

Millet Kolukkattai : சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்த தினை கொழுக்கட்டை!

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது நெய் சேர்த்து சூடானதும் 1 கப் கோதுமை ரவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து ரவையின் மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.தண்ணீர் நன்கு கொதித்த பிறகு வறுத்து வைத்துள்ள கோதுமை ரவையை சேர்க்கவும்.

தண்ணீரில் ரவையை நன்கு கிளறியபின் மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். அவ்வப்போது கிளறி கொண்டே இருக்க வேண்டும். 1 கிண்ணத்தில் 2 கப் வெல்லம் சேர்த்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்றாக கொதித்த பின்பு பாகு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு பாகுவை தனியாக எடுத்து வைக்கவும்.

சுவையான கேரள வாழை இலை மீன்! செய்வது எப்படி?

கோதுமை ரவை சாஃட்டாக பஞ்சை போல் மாறியவுடன் எடுத்து வைத்துள்ள வெல்ல பாகை அதில் ஊற்றி சுமார் மூன்று நிமிடங்களுக்கு நன்றாக கிளறவும். இப்போது இதில் சிறிது நெய் மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து, கேசரி கெட்டியாகும் வரை கிளறி விட்டு பின்னர் ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட்டு , நன்றாக கிளறி எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை ரவை கேசரி தயார்.

click me!