Ragi Paniyaram Recipe : இந்த கட்டுரையில் ராகி பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஈவினிங் டைம் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரும் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களுக்கு சத்தான மற்றும் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் உங்களுக்கான பதிவு தான் இது. உங்கள் வீட்டில் ராகி மாவு இருந்தால் அதில் டேஸ்டான பணியாரம் செய்து கொடுங்கள். இந்த ராகி பணியாரம் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் அருமையாகவும் இருக்கும். முக்கியமாக இது ஆரோக்கியமானதும் கூட. உங்கள் குழந்தைகளும் ரொம்பவே இதை விரும்பி. ஒருமுறை செய்து கொடுங்கள் அவர்கள் அடிக்கடி கேட்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் ராகி பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: 10 நிமிடத்தில் உருளைக்கிழங்கில் மொறுமொறுனு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. உடனே செஞ்சி பாருங்க..!
undefined
ராகி பணியாரம் செய்ய தேவையான பொருட்கள் :
ராகி மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
ரவை - 1/2 கப்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் - 2
சோடா உப்பு - 2 சிட்டிகை
உப்பு - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
நெய் அல்லது நல்லெண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: ஈவினிங் டைம்ல டீக்கு மீல்மேக்கர் வச்சி இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!
செய்முறை :
ராகி பணியாரம் செய்ய முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் ராகி மாவு, அரிசி மாவு ரவை, துருவி தேங்காய், வெல்லம், ஏலக்காய், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அரைத்த அந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும். 15 நிமிடம் கழித்து பிறகு அதில் சோடா உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அடுப்பில் ஒரு பணியார கல்லை வைத்து அதன் குழியில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதில் கலக்கி வைத்த மாவை ஒவ்வொரு குழியில் ஊற்றவும். அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் டேஸ்டான ராகி ப் பணியாரம் ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D