Palak Keerai Poori Recipe : இந்த கட்டுரையில் பாலக்கீரையில் பூரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
கீரை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நம் அனைவரும் அறிந்ததே. எனவே, இதை தினமும் நம் உணவில் சேர்த்து க்கொள்ள வேண்டும். பொதுவாகவே, குழந்தைகளுக்கு கீரை என்றாலே பிடிக்கவே பிடிக்காது. எனவே, சற்று வித்தியாசமான முறையில் அவர்களுக்கு கீரையில் ஏதாவது ரெசிபி செய்து கொடுக்க விரும்பினால் பூரி சுட்டு கொடுங்கள். என்ன கீரையில் பூரி செய்வதா என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?
ஆம், கீரையில் பூரி சுட்டுக் கொடுத்தால் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. மேலும் இந்த பூரி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் பாலக்கீரையில் பூரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
undefined
இதையும் படிங்க: குழந்தைகளுக்குப் பிடித்த பூரி! ரவையில் ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!
பாலக்கீரையில் பூரி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
பச்சை மிளகாய் - 2
பாலக்கீரை - 1 கட்டு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: காலை டிபனுக்கு 'தாக்காளி பூரி' ஒரு முறை செஞ்சு பாருங்க.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
செய்முறை:
பாலக்கீரையில் பூரி செய்ய முதலில், எடுத்து வைத்த கீரையை தண்ணீரில் நன்கு கழுவுங்கள். பிறகு, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கழுவி வைத்த கீரையை அதில் போடவும். பிறகு கீரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றுங்கள். இதனுடன் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது சுமார் 5 நிமிடம் வேக வைக்கவும். கீரை நன்கு வெந்தவுடன் அடுப்பு அணைத்துவிடுங்கள். பிறகு அவற்றை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும். கீரை நன்கு ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைத்த கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் அரைத்து வைத்த கீரையையும் சேர்த்து நன்கு பிசையுங்கள். தேவைப்பட்டால் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மாவை நீங்கள் பூரி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
பிறகு பிசைந்த இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி அதை சப்பாத்தி கல்லில் வைத்து உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். மறுபுறம் அடுப்பில் ஒரு வானலியை வைத்து அதில் பூரி சுடுவதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் எண்ணெய் நன்றாக சூடானதும், அதில் உருட்டி வைத்த பூரி மாவை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் சத்தான பாலக்கீரை பூரி தயார். இந்த பூரியுடன் நீங்கள் உருளைக்கிழங்கு குருமா, காலிஃப்ளவர் குருமா, பட்டாணி குருமா செய்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D