Rava Medu Vadai Recipe : இந்த கட்டுரையில், ரவை மெதுவடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மெதுவடை என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாகவே, மெதுவடை செய்ய ஊளுந்து ஊறவைத்து பின் அதை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து தான் பின்பு தான் வடை செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் மாவு ஏதும் அரைக்காமல் 10 நிமிடத்தில் சூப்பரான வடை செய்யலாம் தெரியுமா? அது எப்படி என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை இருக்கா? அப்படி இருந்தால், அதில் டேஸ்டான மெதுவடை செய்து சாப்பிடுங்கள். முக்கியமாக இந்த வடை செய்வதற்கு ரொம்பவே ஈசி. சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில், ரவை மெதுவடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ரவை மெதுவடை செய்ய தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
கறிவேப்பில் - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - 1 1/2 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ரவையில் மெதுவடை செய்ய முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ரவையை போட்டு பக்குவமாக வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ரவையானது லேசான சூட்டில் இருக்கும் போது அதில் சீரகம், மிளகு தூள், பொடியாக நறுக்கி வைத்த கருவேப்பிலை, கொத்தமல்லி இலை பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கையால் நன்கு பிசைய வேண்டும். மேலும் இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மாமா ஆனது ரவி உப்புமா போல் வித்தியாச இருக்க வேண்டும் உளுந்து மாவு போல் தல தலவென்று இருக்கக் கூடாது தேவைப்பட்டால் கையில் எண்ணை தடவி கொள்ளுங்கள்.
இப்போது எல்லா மாவையும் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி மெதுவடை போல் கையில் தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் வடை சுடுவதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த வடையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொருத்தி எடுக்கவும். அவ்வளவுதான் டேஸ்டான ரவை மெதுவடை ரெடி. இந்த ரவை மெதுவதையுடன் நீங்கள் காரமான சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.