Karuppu Kondakadalai Kulambu Recipe : இந்த கட்டுரையில் கருப்பு கொண்டைக்கடலை குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே பலருக்கு அசைவம் இல்லாமல் சாப்பாடு எதுவும் உள்ளே இறங்காது. இருப்பினும், எல்லா நேரங்களிலும் அசைவ குழம்பை வைக்க முடியாது அல்லவா. அப்படிப்பட்ட நேரங்களில், என்ன செய்வதென்று தெரியவில்லையா உங்களுக்கான பதிவு தான் இது.
ஆம், உங்கள் வீட்டில் கருப்பு கொண்டைக்கடலை இருக்கிறதா? அப்படியானால் அதில் அட்டகாசமான சுவையில் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பில் அசைவ குழம்பின் வாசமும், சுவையும் நிச்சயமாக இருக்கும். மேலும் இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும் ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் அனைவரும் மிகவும் சாப்பிடுவார்கள். முக்கியமாக, கருப்பு கோட்டை கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இந்த குழம்பு ஆரோக்கியமானதும் கூட. சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் கருப்பு கொண்டைக்கடலை குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: கிராமத்து ஸ்டைலில் இப்படி ஒரு முறை முட்டை குழம்பு செய்து பாருங்க... சூப்பரா இருக்கும்..!
கருப்பு கொண்டைக்கடலை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
கருப்புக் கொண்டை கடலை - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 3/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: பேச்சிலர்களுக்கு... சிம்பிளான காரசாரமான சுவையில் தக்காளி குழம்பு.. ரெசிபி இதோ!
செய்முறை:
கொண்டைக்கடலை குழம்பு செய்ய முதலில், எடுத்து வைத்த கொண்டைக்கடலையை தண்ணீரில் நன்றாக கழுவவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஊற வைத்த கொண்டைக்கடலை, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும். பிறகு சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து அவற்றை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானது சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசனை போன பிறகு ,அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மசாலாக்களின் பச்சை வாசனை போன பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். குழம்பு நன்றாக கொதித்ததும் அதில் வேகவைத்து எடுத்த கொண்டைக்கடலையையும் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இப்போது குழம்பை சுமார் ஐந்து நிமிடம் வேக வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை குழம்பு மேல் தூவி இறக்கிவிடவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் கருப்பு கொண்டைக்கடலை குழம்பு ரெடி. இந்த கருப்பு கொண்டைக்கடலை குழம்பை நீங்கள் சூடான சாதத்திற்கு ஊற்றி சாப்பிட்டால்ருசியாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலக் எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D