Murungai Keerai Sadham : இந்த பதிவு இலையில் முருங்கைக்கீரை சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
முருங்கை இலை எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும். இதில் எக்கச்சக்கமான சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக, இதில் இரும்பு சத்து அதிகளவு காணப்படுகிறது. எனவே, முருங்கை இலையில் இப்படி ஒருமுறை சாதம் செய்து கொடுங்கள். கீரையை விரும்பி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சாதம் சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். சரி வாங்க. இப்போது இந்த பதிவு இலையில் முருங்கைக்கீரை சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 10 நிமிடத்தில் சுவையான தேங்காய் சாதம்.. இப்படி செஞ்சி அசத்துங்க..!
முருங்கை கீரை சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 1 கப்
அரிசி - 1 கப்
கடுகு - 1/4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சின்ன வெங்காயம் - தேவையான அளவு
புளித்தண்ணீர் - 1 கப்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - சுவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 1 ஸ்பூன்
இதையும் படிங்க: கமகமன்னு.. டேஸ்ட்டான.. பன்னீர் புலாவ்.. ரெசிபி இதோ!
செய்முறை:
முருங்கைக்கீரை சாதம் செய்ய முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்க்க வேண்டும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம் பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் அதில் மஞ்சள் தூள் குழம்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். அவற்றின் பச்சை வாசனை போன பிறகு அதில் தயாரித்து வைத்த புளித்தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
அடுத்ததாக ஏற்கனவே எடுத்து வைத்த அரிசியை அதில் சேர்க்கவும். ஒரு கப் அரிசிக்கு 1:3 என்று கணக்கில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். இறுதியாக கழுவி வைத்த முருங்கை இலையை இதில் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பிறகு அடுப்பை குறைவான தீயில் வைத்து ஒரு தட்டை கொண்டு மூடி வைத்து வேக வைக்கவும். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து அதில் நெய், பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை ஆகியவற்றை தூவி இறக்குங்கள். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான முருங்கை கீரை சாதம் தயார். இந்த சாதம் செய்ய நீங்கள் முருங்கை கீரையை தவிர பாலாக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை போன்ற எந்த கீரையையும் பயன்படுத்தி சுவையான மற்றும் சத்தான சாதம் செய்யலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D