அசத்தலான சுவையில் வெங்காய புலாவ்.. ஒருமுறை இப்படி செய்ங்க அடிக்கடி செய்வீங்க!!

Published : Aug 03, 2024, 02:50 PM ISTUpdated : Aug 03, 2024, 02:58 PM IST
அசத்தலான சுவையில் வெங்காய புலாவ்.. ஒருமுறை இப்படி செய்ங்க அடிக்கடி செய்வீங்க!!

சுருக்கம்

Onion Pulao Recipe : இந்த கட்டுரையில் வெங்காய புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

மதியம் வித்தியாசமான சுவையில் ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்களா? ஆனால், வீட்டில் காய்கறிகள் ஏதுவும் இல்லையா? கவலைப்படாதே உங்களுக்கான பதிவு தான் இது.. உங்கள் வீட்டில் வெங்காயம் இருக்கிறதா? அப்படியானால், அதை கொண்டு அட்டகாசமான சுவையில் வெங்காய புலாவ் செய்து சாப்பிடுங்கள். இந்த புலாவ் செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு வெங்காய புலாவ் ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் வெங்காய புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  வீட்ல ராஜ்மா இருந்தா ஒருமுறை இப்படி புலாவ் செஞ்சி பாருங்க.. டேஸ்டா இருக்கும்!

வெங்காய புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கடுகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
பூண்டு - 10
வர மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்
புளிசாறு - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
நெய் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  கமகமன்னு.. டேஸ்ட்டான.. பன்னீர் புலாவ்.. ரெசிபி இதோ!

செய்முறை:

வெங்காய புலாவ் செய்ய முதலில், எடுத்து வைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி சுமார் 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நீ  நெய், எண்ணெய்  ஊற்றி சூடானதும், அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பூண்டு, வர மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்ற சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதில் கரைத்து வைத்துள்ள புளி சாறு மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை ஊற்றுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கிளறி விடுங்கள். இப்போது ஊற வைத்துள்ள அரிசியை இதனுடன் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பின் குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து இறக்கவும். அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் வெங்காய புலாவ் ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு