இந்த பாத்திரங்களில் சமைக்காதீங்க.. கேன்சர் ஆபத்து அதிகம்.. எச்சரிக்கும் மருத்துவர்..

By Ramya s  |  First Published Sep 15, 2023, 1:39 PM IST

நான்-ஸ்டிக் அல்லது பாத்திரங்களில் கீறல் ஏற்பட்டால் அது உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து மருத்துவர் பூனம் தேசாய் விளக்கி உள்ளார்


நமது உடல் ஆரோக்கியத்திற்கு நாம் உண்ணும் உணவுகள் எந்தளவுக்கு முக்கியமோ, நாம் சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களும் மிகவும் முக்கியம். அலுமினிய பாத்திரங்கள் மற்றும் நான்-ஸ்டிக் பான்களை பயன்படுத்துவதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மருத்துவர் ஒருவர் வீடியோ மூலம் இந்த விவகாரத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

நான்-ஸ்டிக் அல்லது பாத்திரங்களில் கீறல் ஏற்பட்டால் அது உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து மருத்துவர் பூனம் தேசாய் விளக்கி உள்ளார். நியூயார்க்கில் வசிக்கும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் அவர் “ நான் ஒரு டாக்டர்.. நான் இந்த பேன்களை பயன்படுத்துவதில்லை. கீறப்பட்ட நான்-ஸ்டிக் பான்களில் மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் நம் உணவில் சேரலாம். மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும். அவை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை கூட அதிகரிக்கலாம்." என்று தெரிவித்தார்.

 

ஆனால், நான்-ஸ்டிக் பாத்திரங்களுக்கு பதில் பீங்கான் பாத்திரங்கள் சாத்தியமான மாற்று என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை நீங்கள் மாற்ற வேண்டும் டாக்டர் பூணம் தேசாய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ பீங்கான் பாத்திரங்கள் அடியில் அலுமினிய அடுக்கு இருப்பதால் அதில் கீறல் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறுகிறார். உணவில் உள்ள அலுமினியத்திற்கும் அல்சைமர் நோய்க்கும் இடையே அலுமினியம் தொடர்பு இருப்பதாக சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டி, அலுமினியம் உணவில் சேரும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே கீறல்கள் இருந்தால், நான் ஸ்டிக் அல்லது பீங்கான் பாத்திரங்களை தூக்கி எறிந்துவிடுவதாக அவர் தெரிவித்துள்ளர்.

இனிமே கசப்பா இருக்குன்னு பாகற்காயை தவிர்க்காதீங்க.. எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

நான்-ஸ்டிக் பாத்திரங்கள், குறிப்பாக டெஃப்ளான் போன்ற நான்-ஸ்டிக் பூச்சுகள் கொண்டவை, அவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகின்றன, ஏனெனில் நான் ஸ்டிக் பூச்சு சேதமடைந்தால், அது நச்சுப் புகை மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை உணவில் வெளியிடலாம். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், டெஃப்ளான் பூசப்பட்ட பாத்திரத்தில் ஒரு விரிசல் 9,100 பிளாஸ்டிக் துகள்களை வெளியிடும் என்று சுட்டிக்காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!