அட!! சிக்கன் பஜ்ஜி சாப்பிட்டது இல்லையா? இந்தாங்க டிப்ஸ்!!

By Kalai Selvi  |  First Published Aug 30, 2024, 5:08 PM IST

Chicken Chili Bajji Recipe : இந்த கட்டுரையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன் மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


குழந்தைகள் ஈவினிங் நேரத்தில் டீ காபிக்கு சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று கேட்கிறார்களா? அதுவும் காரசாரமான சுவையில். நீங்கள் வித்தியாசமான சுவையில் ஏதாவது செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? ஆனால், என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது. 

பொதுவாகவே, குழந்தைகளுக்கு சிக்கன் என்றாலே அலாதி பிரியம். அதில் பஜ்ஜி செய்து கொடுத்தால் எப்படி இருக்கும். ஆம், இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது சிக்கன் மிளகாய் பஜ்ஜி. வெங்காய பஜ்ஜிக்கு பிறகு அனைவரும் விரும்பி சாப்பிடும் பஜ்ஜி எதுவென்றால், அது மிளகாய் பஜ்ஜி தான். ஆனால், இந்த மிளகாய் பஜ்ஜியுடன் சிக்கன் சேர்த்து கொடுங்கள், உங்கள் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பஜ்ஜி சாப்பிடுவதற்கு சற்று வித்தியாசமான சுவையில் ருசியாக இருக்கும் முக்கியமாக இந்த பஜ்ஜி செய்வது ரொம்பவே சுலபம். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன் மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: ஈவினிங் ஸ்னாக்ஸிற்கு சூப்பரான முட்டை ஆனியன் பஜ்ஜி! எத்தனை சாப்பிட கொடுத்தாலும் பத்தல என்பார்கள்!

சிக்கன் மிளகாய் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
பஜ்ஜி மிளகாய் - 12
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2  (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தக்காளி - 1  (பொடியாக நறுக்கியது)
கடலை மாவு - 2 கப்
ஓமம் - 1/2 ஸ்பூன் (விரும்பினால்)
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  ஈவ்னிங் ஸ்னாக்ஸிற்கு பெஸ்ட்-குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடும் கிரிஸ்பி அண்ட் கிரன்ச்சி சில்லி சீஸ் பஜ்ஜி!

செய்முறை : 

சிக்கன் மிளகாய் பஜ்ஜி செய்ய முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் கழுவி வைத்த சிக்கன் மற்றும் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து, நான்கு விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போனதும் அதில் இருக்கும் தண்ணீரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சிக்கன் ஆறியதும் அதை கைகளால் நன்கு பிய்த்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் தக்காளி, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் எடுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் வதக்கவும். பிறகு அதில் வேகவைத்த சிக்கன் தண்ணீரை இதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். அவை நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைக்கவும்.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், ஓமம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பஜ்ஜி மிளகாயின் நடுவில் இருக்கும் விதையை நீக்கி தயாரித்து வைத்த சிக்கன் மசாலாவை இதனுள் வைத்து நிரப்பிக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் தயாரித்து வைத்த மிளகாயை ஒவ்வொன்றாகப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் டேஸ்டான சிக்கன் மிளகாய் பஜ்ஜி ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!