இந்த கொள்ளு பானத்தை மட்டும் குடிச்சு பாருங்க! கோடையில் புத்துணர்ச்சி தந்து கூடவே 4 நோய்களையும் விரட்டும்..!

By Ma riyaFirst Published May 21, 2023, 10:30 AM IST
Highlights

கோடைகாலத்தில் உடலை நீர்ச்சத்துடன் பராமரிக்காவிட்டால் பல்வேறு உடல் நல கோளாறுகள் வரும். அதை தவிர்க்க கொள்ளு பானம் குடியுங்கள்..

கோடைகாலத்தில் உடலில் சரியான நீரேற்றம் இருக்க வேண்டும். அப்படி இல்லாததால் தலைமுடி வறண்டு போகும். இப்படி வறட்சியான வறண்ட ஸ்கால்ப் காரணமாக, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் வரும். இதனால் வெயில் காலத்தில் சில உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். 

கோடையில் உங்கள் வயிற்றைக் குளிர்விக்கவும், முடி பிரச்சனைகளையும் குறைக்கவும், சருமத்தை பொலிவுற செய்யவும் குடிக்க வேண்டிய பானத்தை குறித்து நிபுணர் ருஜுதா திவேகர் நமக்கு சொல்கிறார். கொள்ளு பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பானம் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். 

முடி வளர்ச்சி 

இந்த கோடைகால பானத்தை குடிப்பதால் முடிக்கு ஊட்டமளிக்கும். அதன் வளர்ச்சியையும் தூண்டும். இது உங்கள் தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தை தக்கவைத்து, உள்ளிருந்து முடியை நீரேற்றமாக வைக்கிறது. இதன் காரணமாக, முடி ஆரோக்கியமாக மாறும். 

முக பொலிவு

கொள்ளு உண்பது சருமத்திற்கு நன்மை பயக்கும். இது உங்கள் தோலில் உள்ள நிறமியைக் குறைத்து, உள்ளிருந்து நிறத்தை மேம்படுத்த உதவும். முகத்தில் கரும்புள்ளிகள், அழுக்கு போன்றவை நீங்க கொள்ளு பானம் உதவும். வாரம் 3 முறை குடித்தால் முகம் பொலிவு பெறும். 

மனநிலை மாற்றம் 

கொள்ளு வைத்து தயாரிக்கப்படும் இந்த பானம் மனநிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இது ஹார்மோன் கோளாறுகளை சரிசெய்வதோடு உங்கள் மனநிலையை மேம்படுத்தும். இதனால் நீங்கள் நன்றாக உணர முடியும். இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. 

இதையும் படிங்க: கன்ட்ரோல் இல்லாமல் சிறுநீர் கசிவு ஏற்படுதா? இந்த பிரச்சனையா கூட இருக்கும்..!!

எடை இழப்பு 

கொள்ளு உடல் எடையை குறைப்பதில் நல்ல பலனை தரும். வாரத்தில் 2 அல்லது 3 முறை கொள்ளு பானம் அருந்துவது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும். 

செய்முறை 

கோடையில் கொள்ளு பானத்தை தயாரிக்க முதலில் கொள்ளு ஊற வைக்க வேண்டும். பின்னர். அதை கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் மோர், நெய், சீரகம், உப்பு, மிளகாய், சர்க்கரை ஆகியவை சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, பிறகு குடியுங்கள். உடல் புத்துணர்வு ஆகும். வெப்பத்தை சமாளித்து விடலாம். 

இதையும் படிங்க: அடிக்கடி கடல்பாசியை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

click me!