ஆண்களே மீண்டும் வெற்றிலை பாக்கு போட ஆரம்பிங்க.. ஏன்னா அவ்வளவு நன்மைகள் இருக்கு..

Published : Aug 14, 2023, 02:24 PM IST
ஆண்களே மீண்டும் வெற்றிலை பாக்கு போட ஆரம்பிங்க.. ஏன்னா அவ்வளவு நன்மைகள் இருக்கு..

சுருக்கம்

வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன். அதே போல் திருமணத்திற்கு பத்திரிகை காலியாகிவிட்டாலோ அல்லது அவசர திருமணம் என்றாலோ வெற்றிலை பாக்கு வைத்து உறவினர்களை அழைக்கும் பழக்கமும் இருந்து வருகிறது.. 

நமது தாத்தா, பாட்டி வெற்றிலை பாக்கு போட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த காலத்தில் இதுபோன்று கேன்சர் இல்லை, கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை, வேறு எந்த புதிய நோயும் இல்லை.. குறிப்பாக முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை. ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கலாச்சாரச் சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தைக் கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது. வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும்  சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் மாறி உள்ளனர்.  தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள். வெற்றிலையின் மகத்துவத்தை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது. தற்போது தெருவுக்கு தெரு கருத்தரிப்பு மையங்களை அதிகரிப்பதை தற்போது பார்க்க முடிகிறது.

வாயில் கேன்சர் வந்து விடும், படிப்பு வராது, பல்லு கரை போகவே போகாது எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி  ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரையும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊர் தான் நம்ம தமிழ்நாடு.

ஆனால் பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து. வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது, விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு  Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம்.

மலச்சிக்கலா, தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, லவங்கத்தைச் சேர், வீரியம் வேண்டுமா, சாதிக்காய் சேர் என அன்று சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று கருத்தரிப்பு மையங்களில் முடங்கி கிடக்கிறது என்பதே கசப்பான உண்மை.. 

ஒரே இலை பல பிரச்சனைகளுக்கு தீர்வு.. குப்பைமேனி இலையில் இத்தனை நன்மைகள் இருக்கா?

PREV
click me!

Recommended Stories

Summer Food Tips: கோடையில் உணவு வீணாகாமல் இருக்க 10 சூப்பர் டிப்ஸ்!
Milk Tips: பால் அடிக்கடி திரிஞ்சு போகுதா? அப்போ இந்த ஒரு பொருளை சேருங்க போதும்!