Andhra Pesarattu : காலை உணவுக்கு ஹெல்தியான பெசரட்டு தோசை செய்வது எப்படி என்று இந்த பதவில் பார்க்கலாம்.
தினமும் காலை இட்லி, தோசை, ஆப்பம், சாப்பாத்தி, பூரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வித்தியாசமான சுவையில், கூடவே சத்து நிறைந்த ரெசிபி ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு தோசை (பாசிப்பயறு தோசை) செய்து சாப்பிடுங்கள். ஆந்திரா மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும் இந்த தோசையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இப்போது இந்த பதிவில் ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு தோசை செய்முறை அதன் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - 1 கப்
புழுங்கல் அரிசி - 1/2 கப்
இஞ்சி - 1 (சின்ன துண்டு)
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க தோசை சுட போறீங்களா? அப்ப மஸ்ரூமில் இப்படி தோசை சுட்டு சாப்டுங்க.. சுவையா இருக்கும்!
செய்முறை:
முதலில் பாசிப்பயறு மற்றும் அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் சுமார் 5 முதல் 6 மணிநேரம் ஊற வையுங்கள். அதன் பிறகு ஊறிய பாசிப்பயறு, அரிசி பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் ஆகியவற்றை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளுங்கள். இப்போது அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளுங்கள் இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்தது மாவை சுமார் 15 நிமிடங்கள் வைத்து விட்டு, பிறகு தோசை கல்லில் எண்ணெய் தடவி கலக்கி வைத்த மாவை தோசை போல் ஊற்றி இரண்டு பக்கமும் பிரட்டி போட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சத்தான ஆந்திரா பெசரட்டு தோசை ரெடி.. இந்த தோசையுடன் தேங்காய் சட்னி அல்லது வேர் கடலை சட்னி சேர்த்துக் சாப்பிட்டால் சுவையும் அருமையாக இருக்கும்.
குறிப்பு : வேண்டுமானால் தோசையின் மீது பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலையை தூவிவிடுங்கள். சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : டயட்டில் இருக்கீங்களா? அப்ப பாசிப்பருப்பில் இப்படி அடை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!
நன்மைகள்:
- பாசிப்பயரில் புரதம், நார்ச்சத்து, பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உடலை ஆற்றலாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகின்றனது.
- முக்கியமாக பாசிப்பயரில் இருக்கும் புரதம் மற்றும் நார்ச்சத்து பசியைக் குறைத்து, வயிறை நீண்ட நேரம் வைத்திருக்கும். இதனால் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.
- பாசிப்பயிரில் இருக்கும் சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் இன்சுலின் இன்னொரு திறனை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- பாசிப்பயரில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோய் அபாயம் அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது.
- பாசிப்பயரில் இருக்கும் கார்போஹைட்ரேட்கள் மற்றும் புரதம், உடலுக்கு தேவையான ஆற்றலை
வழங்குகிறது.
- பாசிப்பயரில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
- பாசிப்பயரில் உள்ள நார்ச்சத்துக்கள் ஜீரணிப்பதை எளிதாக்கும். இதனால் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அஜீரணம், மலச்சிக்கல் தடுக்கப்படும்.
- பாசிப்பயரில் உள்ள வைட்டமின்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். மேலும் இதில் இருக்கு துத்தநாகம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஹார்மோன் உற்பத்தியை சமன் செய்து, சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
- பாசிப்பயரில் இருக்கும் வைட்டமின் சி சீக்கிரம் வயதாவதைத் தடுக்க பெரிதும் உதவும். மேலும் இதில் உள்ள புரதம் எலும்புகள் பலமாகவும் இருக்க உதவுகிறது.