உங்கள் முடி குபு குபுனு வளர "வேம்பாளம் பட்டை" யூஸ் பண்ணுங்க..!!

Published : Sep 25, 2023, 07:51 PM ISTUpdated : Sep 25, 2023, 07:53 PM IST
உங்கள் முடி குபு குபுனு வளர "வேம்பாளம் பட்டை" யூஸ் பண்ணுங்க..!!

சுருக்கம்

தலைமுடி அடர்த்தாகவும், முடி நீளமாக வளரவும் வளர வேம்பாளம் பட்டை எவ்வாறு உதவுகிறது என்பதை குறித்து இங்கு பார்க்கலம்.

ஒவ்வொரு பெண்களும் தங்கள் தலைமுடியை பாதுகாப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். இருந்தாலும் பல பெண்கள் முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு மற்றும் பேன் தொல்லை போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இந்த வரிசையில் நீங்களும் இருந்தால் இருந்தால் இயற்கை முறையில் இப்பிரச்சனையை தீர்ப்பது சுலபம். அது எப்படியெனில், "வேம்பாளம் பட்டை" தான். ஆம் இந்தப் பட்டை மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் எளிதில் தீர்க்க பெரிதும் உதவுகிறது. பொதுவாகவே, இது பட்டையாகவும், பொடியாகவும் நாட்டு மருந்து எளிதில் கிடைக்கும். மேலும் இந்த பட்டையை நீங்கள் தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்கு பயன்படுத்தினால் உங்கள் தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் தீரும். 

முடி நீளமாக, அடர்த்தியாக வளர வேம்பாளம் பட்டை:
வேம்பாளம் பட்டையானது பெண்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. மற்றும் இது முடி உதிர்வதையும் தடுக்கிறது. 

வேம்பாளம் பட்டை எண்ணெய் எப்படி தயாரிப்பது?
தேங்காய் எண்ணெய் - 1கப்
விளக்கெண்ணெய் - 1/4 கப்
சிறிய வேம்பாளம் பட்டை - 2

இதையும் படிங்க:  தேங்காய் எண்ணெயில் வேம்பாளம் பட்டையை கலந்து, தினமும் தலையில் தடவினால்.. முடி அடர்த்தியா காடு மாதிரி வளரும்!!

செய்முறை:
இந்த எண்ணெய்யை செய்ய முதலில் ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த 3 பொருட்களையும் சேர்த்து 2 முதல் 3 நாட்கள் சூரிய ஒளியில் படும் இடத்தில் வைக்க வேண்டும். 3 நாட்கள் கழித்து எண்ணெயின் நிறம் சிவப்பு வண்ணத்தில் மாறி இருக்கும். நீங்கள் அதனை பயன்படுத்தும் முன் தேவையான அளவு எடுத்து சூடாக்கி பயன்படுத்தவும்.

உடல் ஆரோக்கியத்திற்கு வேம்பாளம் பட்டை: 

  • சருமம் பொழிவு பெற
  • சரும தொற்றுகள் வராமல் தடுக்க 
  • அழற்சி எதிர்ப்புத் தன்மை  தீக்காயங்களை விரைவில் ஆற
  • வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் நாள்பட்ட இருமல் குணமாக
  • சிறுநீரகக் கற்கள், மஞ்சள் காமாலை, எலும்பு முறிவு போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.
  • வேம்பாளம் பட்டை, பெருங்காயம், கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடியாக எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து காயம் இருக்கும் இடத்தில்  போட்டு வந்தால் அவை விரைவில் ஆறும். 
  • வேம்பாளம் பட்டையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பொருள் தலை வலியைக் குறைக்க உதவுகிறது.
  • வேம்பாளம் பட்டை வேர் தலைவலிக்கு சிறந்த மருந்தாகும். 
  • மேலும் இந்த பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சினைக்கு சிறந்தது.

இதையும் படிங்க:  வெறும் 7 நாளில் முடி நீளமா வளர வேம்பாளம்பட்டை எண்ணெய் யூஸ் பண்ணுங்க...அப்புறம் நரைக்கு குட் பை சொல்லுங்க...

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க